இனிக்க இனிக்க பேசி.. விஐபி வீட்டு பெண்களையும் விட்டுவைக்காத சென்னை பூசாரி.. வாக்குமூலத்தில் பரபரப்பு
சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் தயாராகி உள்ளனர்.
கோவையை சேர்ந்த 30 வயது பெண் பொறியாளர், சென்னைக்கு வந்து வேலை தேடியுள்ளார்.. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.. பிரபல டிவி சீரியல்களிலும் நிறைய கேரக்டர்களை செய்து வந்துள்ளார்..

ஆன்மீகம்: ஆன்மீகத்தின் நிறைய ஈடுபாடு கொண்ட இந்த நடிகை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போதுதான், கார்த்திக் முனுசாமி என்ற பூசாரி அறிமுகமாகியிருக்கிறார்.
ஒருநாள், அம்பாள் தீர்த்தம் என்று சொல்லி, பிரசாதத்தில் மயக்க மருந்து கலந்து தந்து, அந்த நடிகையை பலாத்காரம் செய்துள்ளார்.. இன்னொருநாள், விஐபி நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து, நடிகையிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயன்றாராம்.. அப்போதுதான் பூசாரி பற்றி விசாரிக்கும்போது, அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று நடிகைக்கு தெரியவந்தது.
தலைமறைவு: இதுகுறித்து நடிகை விருகம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. விருகம்பாக்கம் போலீசாரும், 10 நாட்கள் தலைமறைவாகியிருந்த பூசாரி கார்த்திக் முனுசாமியை, நேற்று கொடைக்கானலில் கைது செய்தனர்.. செல்போன் சிக்னலை வைத்து, பூசாரியை கைது செய்துள்ளனர்.. பின்னர், சென்னைக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பல தகவல்களை பூசாரி போலீசில் சொன்னாராம்.
குறிப்பாக, தன்னை பற்றி போலீசில் புகார் அளிக்காமல் இருக்க ரூ.40 லட்சம் வரை நடிகையிடம் பேரம் பேசினாராம் இந்த அர்ச்சகர்.. இதுபோல் கோயிலுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட விஐபி வீட்டு பெண்களையும் சீரழித்திருக்கிறாராம். இது குறித்த வாக்குமூலத்தை போலீசார் பூசாரியிடமிருந்து பெற்றுள்ளனர்.
செல்போன்: இப்போதைக்கு நடிகை கொடுத்த ஆதாரங்கள் அனைத்தும் பூசாரியின் செல்போனில் இருந்து போலீசார் எடுத்திருக்கிறார்கள்.. இதனால் அவரது செல்போன், ஆய்வுக்காக தடயவியல் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு, இந்த செல்போனில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்கிறார்கள்..
அதேபோல, பூசாரி கார்த்திக் முனுசாமியால் பாதிக்கப்பட்ட அனைவருமே, பெரிய இடத்துப் பெண்கள் என்பதால், போலீசார் ஆபாச வீடியோக்கள் எந்த வகையிலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறார்களாம்.
பரபரப்பு: அதுமட்டுமல்ல, பூசாரியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசியமாக எடுத்த வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த நிலையில், அதற்கான வங்கி பரிவர்த்தனை ஆவணங்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வங்கி பரிவர்த்தனை ஆவணங்களை கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்களாம்.
அதுமட்டுமல்ல, தன்னுடைய செல்போனில் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை நடிகை பார்த்துவிட்டதால், அதுபற்றி வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்று பூசாரி பயந்துவிட்டாராம். எனவே, தன்னுடைய மனைவி பிரியா மற்றும் தோழி சுவேதா ஆகியோர் மூலம் நடிகையிடம் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருக்கவும், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழவும் ரூ.40 லட்சம் வரை பணம் தருவதாகவும் பேரம் பேசியதும் தற்போது அம்பலமாகி உள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications