Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாய நகைக்கடன் சாதாரண தங்க நகை கடனை விட சூப்பர்.. இந்த ஆவணங்கள் போதுமே.. வட்டி குறைவு, பணம் அதிகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைக்கடன் என்றால், வீட்டில் இருக்கும் தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் வாங்குவது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த நகைக்கடனில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சாதாரண நகைக்கடன், மற்றொன்று விவசாய நகைக்கடன். இந்த இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதை பற்றி இங்கே தெளிவாக தெரிந்து கொள்வோம்.

அவசரத்துக்கு பணத்தேவைகள் நமக்கு இருந்துகொண்டுதான் இருக்கும்... சொந்த செலவுகள், மருத்துவ உதவி, குழந்தைகளின் படிப்பு, கல்யாணம், போன்றவற்றுக்கு சாதாரண நகைக்கடன் வாங்குவோம்.. சின்னதாக சுய தொழில் செய்ய ஆசைப்பட்டாலும் சாதாரண நகைக்கடன் வாங்குவோம். இந்த கடனில் வட்டி சற்று அதிகமாக இருக்கும். மேலும் கடன் தொகைக்கும் ஒரு வரம்பு இருக்கும்.

சாதாரண தங்க நகைக்கடன்

ஆனால் ஒருவர் விவசாயியாக இருந்தால், அல்லது பால் பண்ணை வைத்திருந்தால், மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு விவசாய நோக்கத்திற்கான வழங்கப்படும் தங்க நகைக்கடன் சற்று வேறுமாதிரியானது..

ஆம், இந்த விவசாய நகைக்கடனின் முக்கியமான சிறப்பு என்னவென்றால், சாதாரண நகைக்கடனை விட வட்டி குறைவு, அத்துடன் கூடுதல் கடன் தொகையும் கிடைக்கும்சாதாரண நகைக்கடனில் பொதுவாக அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் வரை தான் கடன் கிடைக்கும். ஆனால் விவசாய நகைக்கடனைப் பொறுத்தவரை, தங்க நகையின் மதிப்பு மற்றும் வங்கி விதிகளின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய்க்கும் மேலாகவும் கடன் கிடைக்கும். அதனால்தான் விவசாயிகள் தங்கள் தேவைகளை எளிதாக நிறைவேற்ற முடிகிறது.

குறைந்த வட்டி, அதிக கடன்

வட்டி விகிதம் பற்றி பார்த்தால், விவசாய நகைக்கடனுக்கு சராசரியாக 7 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகள் இதைவிட குறைவான வட்டியிலும் கடன் வழங்குகின்றன. இது சாதாரண நகைக்கடன்களை விட குறைவான வட்டி என்பதால், விவசாயிகளுக்கு பெரிய நிம்மதி கிடைக்கிறது.

மேலும், இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம், பயிர் சாகுபடி சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பயிர் விளைந்து வருமானம் கிடைத்த பிறகே கடனை கட்டலாம் என்பதால், விவசாயம் செய்பவர்களுக்கு இந்த நகைக்கடன் ரொம்பவே பயனுள்ளதாக உள்ளது.

இதனால் குறைந்த வட்டி, அதிக கடன் தொகை, பட்டா அல்லது குத்தகை ஆவணத்தின் அடிப்படையில் கிடைக்கும் சலுகைகள் ஆகியவற்றால் விவசாய நகைக்கடன் விவசாயிகளுக்கு நம்பிக்கையான உதவியாக இருக்கிறது.

வங்கி ஆவணங்கள்

இந்த கடனை விதை வாங்க, உரம் வாங்க, பயிர் செலவுகள், கால்நடை பராமரிப்பு போன்ற விவசாய பணிகளுக்கான மூலதனமாக பயன்படுத்துவார்கள்..

இந்த கடனை பெற சில முக்கிய ஆவணங்கள் அவசியம். சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள், தங்கள் பெயரில் பட்டா வைத்திருக்க வேண்டும். பட்டா இல்லாமல் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள், அதற்கான குத்தகை ஒப்பந்த ஆவணம் வைத்திருக்க வேண்டும்.

இந்த ஆவணங்களை நகைக்கடன் பெறும் போது வங்கியில் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.இந்த நகைக்கடன் மூலம் விவசாயிகள் உடனடி பணத் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடிகிறது.. மேலும் தனியார் கடனாளிகளிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+