Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவர் விட மாட்டாரு.. தப்பிச்சுடுங்க".. ராஜேந்திர பாலாஜிக்கு ஐடியா தந்த அந்த நபர் யார்? ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எப்படி தப்பித்து சென்றார் என்பது தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி இருந்தார்.

பெரும் தேடலுக்கு பின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். 3 வாரமாக தேடப்பட்டு வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி போலீசார் மூலம் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி விருதுநகர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க விருதுநகர் குற்றவியல் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரையில் இருக்கும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பின்னர் அங்கிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நிர்வாகம்

நிர்வாகம்

நிர்வாக காரணங்களுக்காக இவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பெயில் கிடைக்கவில்லை என்றதும் ராஜேந்திர பாலாஜி 3 வாரம் தலைமறைவாக இருந்தது ஏன்.. போலீசாரிடம் சரண் அடையாமல் அவர் போக்கு காட்டி வந்தது ஏன் என்பதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளன. ராஜேந்திர பாலாஜிக்கு "எல்லாமுமாக" இருக்கும் நிர்வாகி ஒருவர் கொடுத்த ஐடியாவால்தான் அவர் தலைமறைவாகி போலீசுக்கு தண்ணி காட்டி வந்தார் என்று கூறப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி கைது

ராஜேந்திர பாலாஜி கைது

இது தொடர்பாக அதிமுகவினர் சிலரிடம் விசாரித்ததில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். கைதுக்கு ஸ்டே வாங்குவோம். முன் ஜாமீன் வாங்குவோம் என்ற எண்ணத்தில்தான் ராஜேந்திர பாலாஜி முதலில் இருந்தார். ஒருவேளை முன் ஜாமீன் கிடைக்க தாமதம் ஆனால் போலீஸ் கைது செய்யட்டும். சில நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளே இருந்துவிட்டு போலீஸ் கஸ்டடியில் எடுக்கும் முன் ஜாமீன் வாங்கிவிட்டு வெளியே வரலாம் என்றுதான் ராஜேந்திர பாலாஜி நினைத்து இருக்கிறாராம்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

அவருக்கு முதலில் தப்பி ஓடும் எண்ணமே இல்லையாம்.. ஆனால் அதிமுக நிர்வாகி ஒருவர்தான் அவரை பயமுறுத்திவிட்டார் என்று அதிமுக தரப்பு நம்மிடம் தெரிவித்தது. அதிமுக தரப்பில் மேலும் பேசியதில், ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகி ஒருவர்தான் இந்த ஐடியாவை அவருக்கு வழங்கி இருக்கிறார். நீங்கள் ஒரு நாள் ஜெயிலில் இருந்தாலும் சிக்கல்தான்.. தாங்காது. ஒன்று முன் ஜாமீன் வாங்குங்கள்.. இல்லையென்றால் முன் ஜாமீன் கிடைக்கும் வரை போலீஸ் கையில் மாட்டாமல் வெளியே சுற்றிக்கொண்டு இருங்கள்..

 அதிமுக நிர்வாகி

அதிமுக நிர்வாகி

அதிமுகவில் உங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். உங்களை கழற்றிவிட அதிமுகவில் ரெடியாகி இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறாராம். ஸ்டாலின் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று அந்த நிர்வாகி ராஜேந்திர பாலாஜிக்கு ஐடியா கொடுத்ததாக அதிமுக தரப்பு நம்மிடம் கூறியது. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அவரை ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்தார். ராஜேந்திர பாலாஜி சில தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஸ்டாலினை விமர்சனம் செய்தார்.

புகார்

புகார்

அரசியல் கடந்து அநாகரீகமாக ஸ்டாலின் மீது ராஜேந்திர பாலாஜி விமர்சனம் வைத்து வந்தார். இதனால் ஸ்டாலின் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார் என்று ராஜேந்திர பாலாஜிக்கு அவருக்கு நெருக்கமான சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால்தான் ராஜேந்திர பாலாஜி வேறு வழியின்றி தப்பித்து சென்று இருக்கிறார். அதன்பின் போலீஸ் 8 தனிப்படை எல்லாம் அமைக்கவும் ராஜேந்திர பாலாஜி தீவிரத்தை உணர்ந்து கொண்டார்.

Recommended Video

    Rajendra Balaji Arrested | நடந்தது என்ன? | ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது | Oneindia Tamil
    அரண்டு போனார்

    அரண்டு போனார்

    3 வாரம் முன் அதிமுக போராட்டம் ஒன்றை தமிழ்நாடு முழுக்க முன்னெடுத்தது. அப்போதுதான் இந்த தீர்ப்பு வந்தது. அன்று போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி அப்படியே எஸ்கேப் ஆகி திருப்பூர், ஓசூர், கேரளா, திருச்சி, கர்நாடகா, ஆந்திரா என்று பல இடங்களுக்கு சென்றுவிட்டு கடைசியில் கர்நாடகாவில் போலீசாரிடம் சிக்கி உள்ளார். இவரை கஸ்டடியில் எடுத்து போலீசார் வருடம் நாட்களில் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது அதிமுகவின் முக்கிய தலைகள் குறித்து இவரிடம் பல கேள்விகள் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+