கர்நாடக காபி கடை முதலாளி யார்?.. ரபேல் வாட்ச் ரசீதை வைத்து..அண்ணாமலையை மடக்கிய திமுக.. ஆஹா ட்விஸ்ட்
சென்னை: அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச் கர்நாடகாவை சேர்ந்த காபி கடை முதலாளி ஒருவர் "கிப்ட்டாக" கொடுத்தது என்று திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை எப்போதும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்வார். ஆனால் தேர்தல் ஆணையத்தில் தனக்கான சொத்து மதிப்பில் அதிக அளவில் நிலங்கள், சில கோடி மதிப்பு கொண்ட சொத்துக்கள் இருப்பதாக இவர் கணக்கு காட்டி இருந்தார்.
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலையின் கையில் இருக்கும் ரபேல் வாட்ச் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. அந்த வாட்சின் விலை 3.50 -4.40 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம் ஆகி உள்ளது.

சர்ச்சை
இத்தனை லட்சம் ரூபாய்க்கு அண்ணாமலை வாட்ச் வாங்கியது எப்படி. வாட்ச் வாங்கவே இவ்வளவு காசு இருக்கிறது என்றால், அவரிடம் எவ்வளவு காசு இருக்கும். இவர்தான் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவரா? என்ன கதை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள், திமுகவினர் பலர் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இதற்கு அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரப்பில் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடிகாரம்
மேலும் இந்த கடிகாரம் வாங்கிய ரசீது என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடுவேன். அதை வெளியிட்டபின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன், என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்த விமர்சனத்தில், பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

செந்தில் பாலாஜி
வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை இப்போது வரை தனது வாட்சிற்கான பில்லை வெளியிடவில்லை.

திமுக
இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி விமர்சனம் வைத்துள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டில், கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்! தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்லல? அதையும் தாண்டி ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது!, என்று ராஜிவ் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.

ராஜிவ் காந்தி கேள்வி
இது தொடர்பாக முன்பே திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி எழுப்பி உள்ள கேள்வியில், அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்.அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? என்று கேட்டுள்ளார். இதனால் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் தொடர்பான விவாதங்கள் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications