Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘பெட்ரோல் பாம்’ கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வக்கீல் இவர்தான்.. பாஜகவில் முக்கிய பொறுப்பா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது முத்தமிழ் செல்வக்குமார் என்ற வழக்கறிஞர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு நேற்று பெட்ரோல் குண்டை வீசிய நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தின்போது அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இதனையடுத்து பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவனது பெயர் கருக்கா வினோத் என்பதும் ஏற்கனவே தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீதும், காவல் நிலையம் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Who has taken the bail of Karukka Vinod previously who hurled petrol bomb on raj bhavan

பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கருக்கா வினோத் கடந்த வாரம் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வந்ததும் வராததுமாக ஆளுநர் மாளிகையில் பெட்ரொல் குண்டு வீசி அசம்பாவிதம் நடத்த முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கருக்கா வினோத்துக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கருக்கா வினோத், அண்மையில் தான் ஜாமீனில் வந்ததால், அவரை ஜாமீனில் வெளியில் எடுத்தவர் யார் என்பது தெரிந்தால், இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் தெரியவரக்கூடும் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கருக்கா வினோத்தை பிணையில் எடுத்ததாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

Who has taken the bail of Karukka Vinod previously who hurled petrol bomb on raj bhavan

இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் வழக்கில், கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது வழக்கறிஞரும், திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான முத்தமிழ் செல்வகுமார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், வழக்கறிஞர் முத்தமிழ் செல்வம், திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Who has taken the bail of Karukka Vinod previously who hurled petrol bomb on raj bhavan

ஆனால், இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார், "வழக்கறிஞர் என்ற முறையில் பல கட்சியினரை பிணையில் எடுத்துள்ளேன். எல்லா கட்சியினர் மீதான வழக்குகளையும் எடுத்து நடத்தியுள்ளேன். அந்தவகையில் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுக்க உதவினேன். எனக்கும் கருக்கா வினோத்துக்கும் நேரடி தொடர்பு இல்லை. தற்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+