ஜனாதிபதியிடம் விருது வாங்கியவர்.. சென்னையின் புதிய கமிஷனர்! யார் இந்த அபின் தினேஷ் மோதக்?
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் அதிகாரியை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அபின் தினேஷ் மோதக் காவல்துறையில் மெச்சத்தக்க பணிகளை செய்ததற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்றவர் ஆவார்.
சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த 2024 ஆண்டு ஜூலை முதல் பதவி வகித்து வந்த அருண் ஐபிஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றிய தேர்தல் ஆணையம் புதிய டிஜிபியையும் நியமனம் செய்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ள அபின் தினேஷ் மோதக் 1997 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளில் பணியாற்றிய அனுபவமும் அபின் தினேஷ் மோதக்கிற்கு உள்ளது. மாநிலக் குற்றப் பதிவுத் துறையின் கூடுதல் காவல்துறைத் தலைவராகவும், பொருளாதாரக் குற்றப் பிரிவின் கூடுதல் காவல்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையராகவும் கடந்த 2024 ஆம் ஆண்டு பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில்தான், சென்னையில் உள்ள அமலாக்கப் பிரிவு சிஐடி-யின் கூடுதல் காவல்துறை இயக்குநராக (ADGP) நியமனம் செய்யப்பட்டு இருந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இவர், மெக்கானிக் என்ஜினியரிங் முடித்துள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய போது, பெரிய அளவிலான நிதி மோசடிகளை திறம்பட கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பெயர் பெற்றவர் அபின் தினேஷ் மோதக். தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது, ரவுடிகளுக்கு எதிராக பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை என்று தனக்கு கீழ் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிப்பவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். காவல்துறையில் மெச்சத்தக்க பணிகளை செய்ததற்காக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து விருதும் பெற்றுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications