"மாஸ்டர் பிளான்".. பாயிண்ட்டை பிடித்து சைக்கிள் கேப்பில் நுழைந்த ஓபிஆர்..எடப்பாடிக்கு அடுத்த சிக்கல்

ஓபிஆர் இன்று வெளிவந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், சைக்கிள் கேப்பில் நுழைந்து எடப்பாடியை அட்டாக் செய்துள்ளார் அதிமுக எம்பி ரவீந்திரநாத்.

Recommended Video

    ADMKவை OPS மறந்துவிட வேண்டியதுதான் - ஆர்.கே.ராதா கிருஷ்ணன் | Oneindia Tamil

    அன்று நீதிமன்ற உத்தரவை பெற்று பொதுக்குழுவை நடத்தியபோது, தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று சொல்லிவந்த நிலையில், ஜெயலலிதா பதவியையே தூக்கி எறிந்தது எடப்பாடிக்கு மைனஸாகவே அது பார்க்கப்பட்டது.

     அடிமடியிலேயே..

    அடிமடியிலேயே..

    இது அதிமுகவின் அடிவயிற்றிலேயே கை வைத்துவிட்டதாக கருதப்பட்டது.. ஆனால், இதையும் ஓபிஎஸ் தனக்கு சாதகமாகவே அரசியல் செய்ய முனைந்தார்.. ஜெயலலிதா பதவியையே தூக்கியெறிந்த நிலையில், இதை வைத்தே, இனி தென்மண்டலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலக்கூடும் என்றும், இதற்காக சசிகலாவின் ஆதரவையும் நாடலாம் என்றும் கணிக்கப்பட்டது.. இப்படி ஒரு விவாதம் அரசியல் களத்தில் நடந்து கொண்டிருக்கும்போதே, சசிகலா ஒரு பேட்டி தந்தார்.

     சீரியஸ் பேட்டி

    சீரியஸ் பேட்டி

    "அதிமுகவின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. சுயநலவாதிகளைப் புறந்தள்ளும் நேரம் வந்துவிட்டது... தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக பணபலம், படைபலத்தைக் கொண்டு பதவியை அடித்துப் பிடிக்கலாம் என நினைத்தால் அந்தப் பதவி நிலைக்காது.. சட்டப்படி அந்தப் பதவி செல்லாது. சட்டத்திற்குப் புறம்பான தலைமையைத் தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது.

    ஹைகோர்ட்

    ஹைகோர்ட்

    திமுகவில் ஒரு தவறான செயல் நடந்தது என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தார். தன்னை நீக்கியது போல தன்னுடைய கட்சியிலும் நடைபெறக் கூடாது என்பதை மனதில் வைத்துத்தான் பொதுச் செயலாளர் அடிமட்ட தொண்டனால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விதிகளை வகுத்தார். பொதுச் செயலாளராக இருந்த என்னை நீக்கியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட்டில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.. நானே பொதுச் செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும் போது, ஓபிஎஸ்சை நீக்கியது எப்படிச் செல்லும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

     சப்போர்ட்

    சப்போர்ட்

    சசிகலா எழுப்பிய இந்த கேள்வி, ஓபிஎஸ் தரப்புக்கு அப்போதே தெம்பை தந்தது.. கிட்டத்தட்ட சசிகலாவின் மறைமுக சப்போர்ட்டாகவே இது பார்க்கப்பட்டும் வந்தது.. அதேசமயம், தென்மண்டலங்களில், வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் எடப்பாடி அதிருப்தியை சம்பாதித்த நிலையில், ஜெயலலிதா பதவியை தூக்கிஎறிந்து, அந்த பதவியில் தான் உட்கார்ந்து கொண்டது, ஒட்டுமொத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.. இன்றைய தினம் தீர்ப்பு வந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லப்பட்டது.

    போஸ்டிங்

    போஸ்டிங்

    ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது, ஜுன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதானாலும், கட்சி சம்பந்தமாக வேறு எந்த விவகாரமானாலும் சரி, ஓபிஎஸ்ஸின் கையெழுத்தும் தேவை.. அந்தவகையில் இழந்த அதிகாரம் ஓபிஎஸ்ஸுக்கு கையில் வந்துள்ளது.. அதேசமயம், எடப்பாடியின் பொதுச்செயலாளர் போஸ்டிங் செல்லாததாகிவிட்டது.. அதாவது நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே தற்போதும் உள்ளார் என்பதே அர்த்தம்.

    பாயிண்ட்

    பாயிண்ட்

    இப்படிப்பட்ட சூழலில், தேனி அதிமுக எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத், ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்பதுதான் நிரூபணமாகி உள்ளது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.. ஓபிஆர் இப்படி சொல்வதன் மூலம் 2 விஷயங்கள் தெளிவாகி உள்ளன.. ஒன்று, ஓபிஎஸ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது மற்றொன்று, ஜெயலலிதாவையே பொதுச்செயலாளர் போஸ்டிங்கில் இருந்து தூக்கி எறிந்தவர் எடப்பாடி என்ற பிரச்சாரத்தையும் இனி தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது..!

    கதறி அழுதனர்

    கதறி அழுதனர்

    அதிமுக கட்சியில் நிலவும் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் நிலவியபோதுகூட, பல்வேறு போராட்டங்கள், பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன.. அபபோது, ஜெயலலிதா சமாதியில், திடீரென ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒன்றுகூடினர்.. எடப்பாடிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். மேலும், அந்த இடத்தில், கண்ணீர் மல்க நீங்கள் தான் நிரந்தர பொதுச்செயலாளர் என ஜெயலலிதா சமாதி முன்பு சொல்லி கதறி அழுதனர். அப்போது, திடீரென அந்த கூட்டத்தில் இருந்த கேசவன் என்ற நபர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    நிம்மதி உணர்வு

    நிம்மதி உணர்வு

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் மக்கள் உடனடியாக அவரை தடுத்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்... எடப்பாடி தற்காலிக பொதுச்செயலாளர் என்றதுமே இப்படியெல்லாம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்தான், இன்றைய தினம் அது தவிடுபொடியாகி உள்ளது.. அத்துடன் ஓபிஎஸ் தரப்பு, இன்றைய தினம் சமாதிக்கு நிம்மதி உணர்வுடன் சென்றுள்ளதும், அஞ்சலி செலுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ஒரே ஒரு எம்பி

    ஒரே ஒரு எம்பி

    தொடர்ந்து தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஆர் சொன்னதாவது: "இன்று வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.. அதிமுகவில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு எதிராக நான் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரக்கூடாது என்று கடிதம் தந்தனர். ஆனால் அதற்கு நானும் கழக ஒருங்கிணைப்பாளரும் மறுப்பு கடிதம் அனுப்பினோம்.. அங்குள்ள சபாநாயகர் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்பதை அனைவரும் அறிந்ததுதான்.

    நம்பிக்கை + பலம்

    நம்பிக்கை + பலம்

    கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் மட்டும் தான்... அதற்கு நன்றிக்கடனாக தமிழகம் மற்றும் தேனி மக்களுடைய கோரிக்கைகளை மோடி வரை கொண்டு சென்று அனைத்து திட்டங்களையும் வலியுறுத்திப் பேசி உள்ளேன். அதனால், என்னுடைய பணி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும்.,. இப்போதுள்ள சூழ்நிலையில் அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்று ஒருங்கிணைப்பாளர் சொல்லி உள்ளது நம்பிக்கையை கூட்டுகிறது.

    சான்ஸ் இருக்கா?

    சான்ஸ் இருக்கா?

    அதிமுக ஒன்று கூட வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள்.. அரசியலில் இன்று ஒன்றும், நாளை ஒன்றுமாக நிகழும்.. இது இயல்புதான்.. அதனால், அதை தான் உறுதியாக சொல்ல முடியாது... தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ என்ன பிரதிபலிக்கிறார்களோ அதன்படி ஒருங்கிணைப்பாளர் செயல்படுவார்" என்று ஓபிஆர் கூறியுள்ளார்.. ஏற்கனவே கட்சி பிரிந்துள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி இவர்கள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு இழுபறியாகும் நிலையே ஏற்படக்கூடுமானால், கட்சி மேலும் பலவீனமடையும் என்கிறார்கள்... அடுத்து என்னவோ? பார்ப்போம்...!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+