ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! தலைமறைவான அஞ்சலை! புளியந்தோப்பை கட்டுக்குள் வைத்திருந்த பெண்! யார் இவர்?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலையை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரை வலைவிரித்து தேடி வருகிறார்கள். இந்த கொலை வழக்கில் அஞ்சலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தேடி வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வேணுகோபால் பெருமாள் தெருவில் கட்டி வரும் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆயுதங்களை போலீஸாருக்கு காட்ட சென்ற போது அவர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்தனர். இதில் அவர் இறந்தார். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கைது நடவடிக்கையாக நடந்து வருகிறது.
திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுக நிர்வாகியாக இருந்த மலர்க்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் அஞ்சலையை பிடித்து விசாரிக்க போலீஸார் முயற்சித்து வருகிறார்கள்.

இந்த அஞ்சலை, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். இவர் முன்பு வடசென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் காதலியான இவர், பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் அவர் திடீரென பாஜகவில் ஐக்கியமானார். அங்கு அவர் வடசென்னை மேற்கு மாவட்டத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜகவை சேர்ந்த செல்வராஜையும் போலீஸார் தேடி வருகிறார்கள். வடசென்னையில் கஞ்சா விற்பனையில் முக்கிய நபராக திகழ்ந்தவர்.
கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாக இருந்த நிலை அஞ்சலையை அவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு அஞ்சலையை ரகசியமாக சந்திக்க வந்த போதுதான் ஆற்காடு சுரேஷன் போலீஸில் சிக்கி பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இதன் பின்னர் பாஜகவில் இணைந்த அஞ்சலை தமிழக பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வந்தார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications