அர்ச்சனா பட்நாயக்குடன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் யார் தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் இணைந்து செயல்பட இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த இரு அதிகாரிகளில் ஒருவர் யார் என்பது தெரியுமா?
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இதற்கான தேதி இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக் கூட்டம், மக்கள் சந்திப்பு கூட்டம் என பலவற்றை நடத்தி வருகிறது. அது போல் கட்சி தலைமைகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதே வேளை தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு என பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி சிவஞானம் ஐஏஎஸ் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரிகள் இருவரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் இணைந்து செயல்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த இருவரில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பவர் யார் தெரியுமா? அவர் நடிகர் சின்னி ஜெயந்தின் மகனாவார். அப்பாவை போல் சினிமா துறைக்கு வராமல் ஐஏஎஸ் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் அறிவியல் மற்றும் வரைபடவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.
இதையடுத்து டெல்லி அசோகா பல்கலைக்கழகத்தில் லிபரல் ஆர்ட்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி கொண்டே யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்தார். சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற இவருக்கு முதல் முயற்சி தோல்வியை தந்தது.
எனினும் முயன்று கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாம் முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்தது. அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பிடித்து சாதனை புரிந்தார். இந்த தேர்வுக்கு தயாராகும் போது சோர்வுகளை எதிர்கொள்ள யூடியூப் சேனல்களில் தன்னம்பிக்கை தரும் உரையாடல்களை கேட்டு உற்சாகமடைந்தாராம்.
இவர் ஒரு நல்ல பாடகர், இவருக்கும் நடிப்பில் ஆர்வம் இருந்தது. இதனால் படித்து முடித்துவிட்டு நடிகராலாம் என்றிருந்தாராம். ஆனால் டெல்லியில் படித்த போது அங்கு வந்த யுபிஎஸ்சி தேர்வர்களை பார்த்து பார்த்து தனக்கும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் பூத்ததாக தெரிவித்துள்ளார். இவர் பக்தி பாடல்களை பாடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அண்மையில் இவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications