சென்னை மழைக்கு இடையே! முதல் ஆளாக ரெயின் கோட்டோடு களத்திற்கு வந்த தனலட்சுமி! பூரித்த மக்கள்! யாரு இது
சென்னை: சென்னையில் விடாமல் பெய்த கனமழைக்கு இடையே முதல் ஆளாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்ட தனலட்சுமி சரவணன் மக்கள் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இன்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடல் பகுதியில் திடீரென ஏற்பட்டு உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகரித்து வந்த வெயிலுக்கு இடையில் ஜூன் முதல் வாரம் 2 நாட்கள் திடீரென மழை பெய்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது.

திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்தது.
இடையில் 1 மணி நேரம் நின்று இருந்த மழை மீண்டும் தீவிரமாக பெய்ய தொடங்கி உள்ளது. இந்த விடாத மழை காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சீரமைப்பு: இந்த மழைக்கு இடையே அதிகாலை மழை நிற்கும் முன்பே கொட்டும் மழையில் சென்னை மாநகராட்சி 96 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி சரவணன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.
காலையில் பொழுது விடிந்து மாநகராட்சி அதிகாரிகளோ, நிர்வாகிகளோ, எம்எல்ஏக்களோ வரும் முன் வார்டு 96க்கு வந்து அங்கு மழை தேங்கி இருக்கும் இடங்களை பார்வையிட்டு தன்னுடன் வந்த ஊழியர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகர உறுப்பினர் ஆவார். மழை நிற்கும் வரை காத்திருக்காமல் மழைக்கு இடையிலேயே ரெயின் கோட்டோடு சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை செய்தார். சாலையில் எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் பார்வையிட்டு அதை சரி செய்தார். அவரின் இந்த நடவடிக்கை மக்கள் இடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
தண்ணீர் தேங்கி உள்ளதா? : சென்னையில் கடந்த வாரம் விடாமல் மழை பெய்தது. தொடர்ந்து தீவிர மழை பெய்தாலும் பெரிதாக சாலைகளில் வெள்ளம் தேங்கவில்லை. மழை பெய்த சில நிமிடங்களில் வெள்ளம் வெளியேறியது.

இதற்கு சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் வெள்ள நீர் குழாய்கள்தான் காரணம். வெள்ளம் வடிவதற்காக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதே சமயம் கத்திப்பாரா உள்ளிட்ட சப் வே பாலங்கள் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கே தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மழை அளவு: சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.
நந்தனம் - 11.7 செ.மீ. தரமணி - 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ - மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் - 7.9 செ.மீ. திருவள்ளூர் - 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications