அடிமட்ட தொண்டர்! படிப்படியாக மேலே உயர்ந்தவர்! திமுகவின் டாப் சாய்ஸ்! யாரிந்த பொள்ளாச்சி வேட்பாளர்
சென்னை: மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி திமுக சார்பாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,

1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்
பொள்ளாச்சி: இதில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி திமுக சார்பாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இங்கே எம்.பி.யாக இருந்த கு.சண்முகசுந்தரம் வாய்ப்பை இழந்துள்ளார். 554,230 வாக்குகள் பெற்று கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வென்றார்.
ஆனாலும் இவரின் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஈஸ்வரசாமி வாய்ப்பு பெற்றுள்ளார். மடத்துக்குளம் பகுதியில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்த்தவர் ஈஸ்வரசாமி. நூற்பாலையில் சாதாரண ஊழியராக வேலை பார்த்த இவர் சுபம் பைனான்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல நிறுவனங்களை, பணிகளை செய்தார். அதன்பின் டிவிஎஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை எடுத்து 2001ல் டீலர் ஆனார். இவரின் திறமையான வேலையை பார்த்து பல மாவட்டங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பெற்றார்.

பல மாவட்டங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் டீலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் வகித்தவர் இது தவிர வேறு சில பிஸினஸ்களையும் தொடங்கி நடத்தினார். அதோடு அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றையும் இவர் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறார்.
2006ல் திமுகவில் இணைந்தவர் 2007 ம் ஆண்டு கருப்புசாமி புதுார் கிளைக்கழகத்தின் ஒன்றிய பிரதிநிதியாக பொறுப்பு ஏற்றார். அதன்பின் பல்வேறு பொறுப்புகளை வைத்தவர் கவுன்சிலர் தொடங்கி பல்வேறு ஊராட்சி, ஒன்றிய பதவிகளை வைத்துள்ளார். இவரின் தீவிர அரசியல் பணிகள் காரணமாக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் பதவியை ஈஸ்வரசாமி பெற்றார்.
இந்த நிலையில் தற்போது திமுக சார்பாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications