இன்றைய உத்தரவு இவருக்குத்தான் பிளஸ்ஸா? மார்ச் 24ல் 2 விதமான ஆக்ஷன்.. கணிக்கும் அரசியல் விமர்சகர்!
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் இறுதித் தீர்ப்பு 24ஆம் தேதி வருவதற்கு வாய்ப்புகள் குறைவு எனக் கூறியுள்ளார் சுமந்த் சி.ராமன்.
சென்னை : இன்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் ஆளுக்கொரு பிளஸ்ஸாக இருக்கிறது, 24ஆம் தேதி வரும் தீர்ப்பு 2 விதமாக இருக்கக்கூடும் என அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்து, வேட்பு மனு தாக்கலையும் நிறைவு செய்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஈபிஎஸ் பெயரைத் தவிர வேறு யார் பெயரிலும் விருப்பமனுக்கள் வரவில்லை.
இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பில், இந்த தேர்தலை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்கவில்லை
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்களால் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை இன்று அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அதிமுக தரப்பில் பரபரப்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்களைக் கேட்ட நீதிபதி ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்காவிட்டாலும் ஒரு சிறிய நிவாரணத்தை அளித்துள்ளார்.

தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது
இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த பிரதான வழக்கின் விசாரணை வரும் மார்ச் 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 24 ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலளார் தேர்தலை நடத்திக்கொள்ளலாம், ஆனால் தேர்தல் முடிவை பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வரும் வரை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு எங்களுக்கு வெற்றி என ஓபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர். முடிவை அறிவிப்பது தள்ளிப்போயிருக்கிறது அவ்வளவுதான் என எடப்பாடி தரப்பினர் கூறுகின்றனர்.

ஆளுக்கொரு பிளஸ்
இந்நிலையில் இந்த உத்தரவு பற்றிப் பேசியுள்ள அரசியல் விமர்சகர் சுமந்த் சி. ராமன் "பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை. அது இன்று வழங்கப்படவில்லை. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம், தேர்தல் முடிவை தீர்ப்பு வரும் வரை அறிவிக்கக் கூடாது என்று மட்டுமே உத்தரவு வந்துள்ளது. ஆனால், ஒரே ஒரு வேட்பாளர் தான் என்பதால் யார் வெற்றி பெறுவது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுதான் தாமதமாகிறது. தேர்தல் நடத்த தடையில்லை என்பதே எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள பிளஸ் பாயிண்ட். முடிவுகள் அறிவிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்துள்ள பிளஸ்.

2 விதமான உத்தரவு வர வாய்ப்பு
பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் இறுதித் தீர்ப்பு 24ஆம் தேதி வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஏதேனும் இடைக்கால உத்தரவு வரவே வாய்ப்புள்ளது. என்ன முடிவு வந்தாலும் அதை எதிர்த்து ஒரு தரப்பினர் மேல்முறையீடு செய்யப்போகிறார்கள். டிவிஷன் பெஞ்ச், பிறகு சுப்ரீம் கோர்ட் எனச் செல்ல வாய்ப்பிருக்கிறது. தேர்தல் முடிவை அறிவிக்க தடை தொடர வாய்ப்புள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகவே தொடரக்கூடும். இறுதித் தீர்ப்புக்குப் பிறகு தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications