நிர்வாக பிரிவை டிஜிட்டல் மயமாக்கியவர்! நாகையின் நேர்மையாளர்! யார் இந்த புதிய பொறுப்பு டிஜிபி?
சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜி.வெங்கட்ராமன் யார் என்பதை பார்க்கலாம். அவரது நேர்மைக்கு கிடைத்த பதவியுயர்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வெங்கட்ராமன். இவர் 1968 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி பிறந்தார். இவர் இளங்கலை பொருளாதாரம், பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் 1994 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். 1996ஆம் ஆண்டு திருச்செந்தூர் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். 1997ஆம் ஆண்டு கோவில்பட்டி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏஎஸ்பியாக பதவியேற்றார்.
1998 ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்த்தப்பட்ட வெங்கட்ராமன், மத்திய அரசின் ரா உளவுப்பிரிவிலும் பணியாற்றி, பிறகு அதே ஆண்டு தமிழகத்திற்கு வந்தார்.
2001 ஆம் ஆண்டு சிபிஐ பிரிவின் சென்னை எஸ்பியாகவும் 2008ஆம் ஆண்டு அதே பிரிவில் டிஐஜியாகவும் வெங்கட்ராமன் பதவி உயர்வு பெற்றார்.
2009-ம் ஆண்டு தமிழக காவல் துறை சிபிசிஐடி டிஜஜியாக இருந்தார். 2012 ஆம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற வெங்கட்ராமன், சைபர் கிரைம், தலைமையகம், நிர்வாக பணிகளில் பணியாற்றினார்.
கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர் பெற்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். தற்போது தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக படைத் தலைவர் பொறுப்பையும் சேர்த்து பார்ப்பார். நிர்வாக பிரிவு ஐஜியாக இருந்த போது காகிதமில்லா பணியை நடைமுறைப்படுத்தியவர் வெங்கட்ராமன்.
2011 டிஜிபியாக நியமிக்கப்பட்ட ராமானுஜம் ஐபிஎஸ், 2016 டிஜிபியான டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் சட்டம் ஒழுங்கு, உளவுத் துறைகளை கூடுதல் பொறுப்புகளை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications