"இயேசு".. கறிக்கடைய மூடறீங்களே, ரம்ஜானுக்கு டாஸ்மாக் லீவா.. சீமான் ஏன் இப்படி கேட்கிறார் தெரியுதா, ஓ
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிக்கைகள் ஒவ்வொன்றும், திராவிட கட்சிகளுக்கு பெருத்த தலைவலியை உண்டுபண்ணி வருகிறதாம்.. என்ன காரணம்?
10 வருட காலமாக அரசியலில் களத்தில் நீடித்து வந்தாலும், இதுவரை நடந்த ஒரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதில்லை..

அதேசமயம், பாஜகவின் பி டீம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருந்துவரும் சீமான், கடந்த ஈரோடு கிழக்கு தேர்தலின்போதுதான் வெளிப்படையாக, தன்னுடைய பேச்சில் பாஜகவை பற்றியும், தன்னை அனைவரும் ஆர்எஸ்ஸின் கைக்கூலி, பாஜகவின் பி-டீம் என்று விமர்சிப்பது பற்றியும் வெளிப்படையாகவே பேசியிருந்தார்..
பல்ப் எரியுமா: "எப்ப பார்த்தாலும், "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க.. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்? என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா பல்ப் எரியும்? ஒரு குடையை உங்களால, கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்" என்பது, ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்" என்பதா??" என்று கேள்வியும் எழுப்பியிருந்ததை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவனிக்காமல் இல்லை.
வாளி தண்ணீர்: அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, சிறுபான்மையினர் நலன்குறித்து சீமான் பேசியிருந்தார்.. "கிறிஸ்தவர்கள் என்னோடு இல்லை, நான்தான் உங்களோடு இருக்கிறேன்.. என்னை விட்டால் உங்களுக்கு நாதி இல்லை. கிறிஸ்து ஏசு புரட்சி செய்ய வந்தேன் என்றார். இப்போது உங்களுக்கோ புரட்சி என்றால் என்னவென்றே தெரியாது. கருணாநிதி ஒரு வாளி தண்ணீர், மற்றவர்கள் ஒரு வாளி என்று புரட்சி தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டனர்.
கைக்கூலி: ஆர்எஸ்எஸ் கைக்கூலி, பிஜேபியின் பி டீம் என்றெல்லாம் என்னை அவதூறு செய்தார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் நல கட்சித் தலைவர் சாம் ஏசுதாஸ் என்னை முழுமையாக நம்பினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பைபிளையும் குறானையும் ஊன்றி படிக்க வேண்டும்... அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும். நீங்கள் சிறுபான்மை கிடையாது.. 13 கோடி இனத்தின் மக்கள் நீங்கள்.. சிறுபான்மை என்று சொல்வதை இனி ஏற்கவே கூடாது. நீங்கள் சிறுபான்மை என்றால், யார் பெரும்பான்மை? ஸ்டாலினா? உதயநிதியா?
இயேசு: நேற்று இந்து, இன்று கிறிஸ்தவன், நாளை இஸ்லாமியன். மதம் மாறிக் கொள்ளக்கூடியது. ஆனால் நாம் தமிழர்கள். அது எப்போதும் மாறாதது. கட்சி பெயரை முதலில் மாற்றுங்கள், சிறுபான்மை என்ற சொல்லையே அப்புறப்படுத்துங்கள். பார்த்தால் தொட்டால் நின்றால் தீட்டு என்றதால் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டோம். ஒரே நாடு என்கிறீர்களே, அப்படின்னா ஒரே சுடுகாட்டை முதலில் கொண்டு வாருங்கள்.
அதிர்வலைகள் : கன்னடன், மலையாளி, தெலுங்கன் நம்மை ஆட்சி செய்து விட்டார்கள். இனி வட இந்தியன் ஆளப் போகிறான். நாம் என்ன செய்ய போகிறோம்? பிஷப்புகள் சர்ச்களுக்கு செல்வதில்லை.. கருணாநிதி வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு நகர்வதே கிடையாது.. ஜமாத்துகளும் அப்படித் தான். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருணாநிதி செய்த ஏதாவது ஒரே ஒரு நன்மையை சொல்லுங்க பார்ப்போம்" என்று சீமான் பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்வலையை அரசியல் களத்தில் உண்டுபண்ணியது.. இதோ, இந்த ஒரு வார காலமாகவே சீமானின் அறிக்கைகளில், சிறுபான்மையினருக்கான ஆதரவுகள் அதிகம் வெளிப்பட்டு வருகிறது..

கறிக்கடை எங்கே: மகாவீரர் திருநாளை காரணமாகக் காட்டி, இறைச்சிக்கடைகளை மூடச்சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. உணவு என்பது அவரவர் விருப்பவுரிமை; அதில் அரசு தலையிட்டுத் தடைசெய்வது என்பது பாசிசம்... இங்கு சமணத்தைத் தழுவி நிற்கும் மார்வாடி மக்களின் உணர்வுக்காகவே இறைச்சிக்கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகிறது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பெருவிழாவுக்கு ராஜஸ்தானில் எவ்வித விடுமுறையுமில்லாதபோது, மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக அவர்களது வசதிக்காகவும், உணர்வுக்காகவும் தமிழ்நாட்டிற்குள் இறைச்சிக்கடைகளை மூடுவது சரியானதல்ல!
மார்வாடிகள்: மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பதென்பது அப்பட்டமான சனநாயகத் துரோகம். 'எல்லோருக்குமான அரசு' எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, ஒரு தரப்பினரை நிறைவுறச் செய்ய தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது" என்று காட்டமாக கூறியிருந்தார் சீமான்.. நேற்றைய தினம் புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்ட நிலையில், சீமான் இன்னொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
"தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மையாக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
முஸ்லிம் மக்கள் நீர் கூட அருந்தாமல் இறைவனை எண்ணி 30 நாட்கள் நோன்பிருந்து கொண்டாடும் ஈகைப் பெருநாளான ரம்ஜான் அன்றாவது தி.மு.க. அரசு மதுக்கடைகளை மூடப்போகிறதா? அல்லது அன்றும் திறந்து வைக்குமா? இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மை கொள்கையா? என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, திமுக அரசு இனிவரும் காலங்களிலாவது கிறிஸ்தவ மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்றும், முஸ்லிம் மக்கள் கொண்டாடும் ரம்ஜான் பெருநாளன்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. பட்டியலின, சிறுபான்மை ஓட்டுக்களை அதிகம் பெற்றுவரும் திமுகவுக்கு சீமானின் இந்த அடுத்தடுத்த அறிக்கைகள் எரிச்சலையே உண்டுபண்ணி வருவதாகவும் தெரிகிறது.. ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார் சீமான்..
அதுமட்டுமல்லாமல், பாஜகவின் வெறுப்பு ஓட்டுக்கள், மற்றும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை பெறுவதிலும் முனைப்பு காட்டி வருகிறார்.. திமுக அதிருப்தி ஓட்டு + சிறுபான்மையினரின் ஓட்டுக்களுக்களை குறி வைத்து சீமான் நகர்ந்துள்ளது, அதிமுகவுக்கே கலக்கத்தை தந்து வருகிறதாம்.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்ததால்தான், கடந்த தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்ததாக அதிமுக உள்ளுக்குள் பொருமலில் உள்ளபோது, நாம் தமிழர் கட்சியின் அரசியல், மேலும் கலக்கத்தை தந்து வருகிறதாம்.. ஆக, சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெரும்பான்மையாக அள்ள போவது, திமுகவா? அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications