ஓபிஎஸ் ஹைகோர்ட்டில் வைத்த முக்கிய கோரிக்கை.. பொதுக்குழு வழக்கு திடீரென ஒத்திவைப்பு.. ஏன்?
அதிமுக பொதுக்குழு விசாரணை இன்று முதல் ஹைகோர்ட்டில் ஆரம்பமாகிறது
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை, வரும் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, இந்த உத்தரவை நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார்.
அதிமுகவில் பொதுக்குழுவை நடத்த விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் கடுமையாக முயற்சித்தார்.. இதற்காக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து சார்பில் வழக்குகளும் தொடர்ந்தனர்,
ஆனால், அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தும், பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு உத்தரவிட்டிருந்தார்.

பொதுக்குழு
முன்னதாக, இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், எடப்பாடியின் கை மீண்டும் ஓங்கவே செய்யும்.. அப்போது ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அல்லது தீர்மானங்கள் ரத்தானால், எடப்பாடியின் அடுத்த நகர்வு என்ன என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டி பறந்த நிலையில், புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது..

வாதங்கள்
இதையடுத்து, ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 2 நாட்களுக்கு முன்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. பின்னர். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், தாங்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி) முன்பாகவே வாதங்களை முன்வைக்கிறோம் என்று விளக்கம் தந்தனர்.

வாபஸ்
இதையடுத்து நீதிபதி தனக்கு எதிராக கொடுக்கப்பட்ட கடிதத்தை வாபஸ் பெற்று மனுவாகத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த கடிதத்தை திரும்ப பெற்ற ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அதை மனுவாக தாக்கல் செய்தனர்.. அப்போது நீதிபதி, "இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல்.. தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது, ஒருவேளை திருத்தம் இருந்தால், இதுதொடர்பாக கடிதம் கொடுப்பதற்கு முன்பு என்னிடம் நீங்கள் ஆஜராகி தெரிவித்திருந்தால், நானே இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பேன் என்று கூறினார்..

புதிய நீதிபதி
அதற்கு ஓபிஎஸ் தரப்பிலோ, "அந்த கடிதத்தில் உங்களுக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. இந்த வழக்கை நீங்கள் ஏற்கெனவே 2 முறை விசாரித்துள்ளதால் புதிதாக ஒரு நீதிபதி விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கோரினோம்" என மீண்டும் விளக்கம் தந்தனர். பிறகு, ஓபிஎஸ் தரப்பு மனுவை பதிவுசெய்துகொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவுசெய்யட்டும் என்று கூறி கூறி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

ஜெயச்சந்திரன்
இறுதியில், இந்தவழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்திருந்தார்.. அதன்படி, இன்றுமுதல் ஜெயச்சந்திரன் பொதுக்குழு விசாரணையை துவங்க உள்ளார்.. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான உத்தரவுகள் வந்திருந்த நிலையில், தற்போது எந்த மாதிரியான உத்தரவுகள் வெளிவர போகிறதோ தெரியவில்லை.. இப்போது வரை ஓபிஎஸ் சட்டரீதியான போராட்டங்களை கைவிடாத நிலையில், புதிய நீதிபதியை அடம்பிடித்து கேட்டு வாங்கி உள்ள நிலையில், விசாரணைகளும் எப்படி நடக்க போகிறது என்று தெரியவில்லை.. எனினும் இந்த 2 வாரத்துக்கு, அதிமுகவுக்குள் டென்ஷன் எகிறியே காணப்படும் என்று தெரிகிறது.

என்னாகும்?
முன்னதாக, இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், எடப்பாடியின் கை மீண்டும் ஓங்ககே செய்யும்.. அப்போது ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அல்லது தீர்மானங்கள் ரத்தானால், எடப்பாடியின் அடுத்த நகர்வு என்ன என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டி பறந்த நிலையில், புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது..

ஜெயச்சந்திரன்
அப்போது வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. தங்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகவில்லை என்றும், தங்கள் தரப்பு வாதங்களை அவர்தான் முன்வைக்க டெல்லியிலிருந்து வர வேண்டும், ஆனால் அவர் ஆஜராகாததால், வழக்கை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் சார்பில் கோரப்பட்டது.. இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications