Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டார் தொகுதி.. உச்சகட்ட எதிர்பார்ப்பு.. ஆர்.கே.நகரில் அதிரி புதிரி வெற்றி யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் வட சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி பற்றி இப்போது காண்போம்.

ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஆர்.கே.நகர்

ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர் தொகுதி தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சியமான ஒரு ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாகும்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2 முறை இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டபோது ஆர்.கே.நகர் தொகுதியின் உறுப்பினராக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும், இதே தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்று, மீண்டும் முதல்வரானார்.

இடைத்தேர்தல் நடந்த தொகுதி

இடைத்தேர்தல் நடந்த தொகுதி

அடுத்த சில மாதங்களிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2017-ல் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவின் அடையாளமாகவும் ஆர்.கே.நகர் மாறி விட்டது. தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதியின் எம்எல்ஏ.வாக டி.டி.வி தினகரன் உள்ளார்.

தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை

தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை

ஆர்.கே.நகரில் மொத்தம் 2,62,738 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,26,744 பேரும், பெண்கள் 1,35,889 பேரும் அடங்குவர். திருநங்கைகள் 105 பேர் உள்ளனர். ஆர்.கே.நகர் மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். அதாவது மொத்த வாக்காளர்களில் 38% மீனவர்கள்தான். காசிமேடு துறைமுகம் இந்த தொகுதியில்தான் உள்ளது.மக்கள் அடர்த்தி அதிகமான தொகுதி என்பதால் குடிநீர் பிரச்னை எப்போதும் இங்கு தலைவிரித்தாடும்.

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

இதேபோல் போக்குவரத்து நெரிசல் என்பது இங்கு காலம்காலமாக நிலவும் ஒரு பிரச்சினையாகும். ஐஓசி, எச்.பி.சி.எல் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதால், நிலத்தடி நீரில் எண்ணெய் கசிந்து குடிநீரில் குடிப்பதற்கு லாயக்கற்றதாக உள்ளது. இதேபோல் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் ஏற்படும் சுகாதாரச்சீர்கேட்டை களைய இதுவரை எந்த கட்சியும் முன்வரவில்லை.

வெற்றி பெறப்போவது யார்?

வெற்றி பெறப்போவது யார்?

இந்த தொகுதியில் 10 முறை பொதுத்தேர்தலும், இருமுறை இடைத்தேர்தலும் நடந்துள்ள இதில் அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுகவும், காங்கிரசும் தலா 2 முறை வென்றுள்ளன. 1996-க்கு பின் திமுக இங்கே வென்றதில்லை. ஆர்.கே.நகரில் இந்த முறை அ.தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ் போட்டியிடுகிறார். டி.டி.வி தினகரனின் அமமுக சார்பில் காளிதாஸ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஜே.ஜே.எபிநேசர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+