Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த "நேர்மை".. யார் இந்த நாகஜோதி.. உலக நாயகனையே மிரள வைத்த ஐபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்துத் துறையில் பணமோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரி நாகஜோதி யார் தெரியுமா?

மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்தவர் நாகஜோதி. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ் குமார் என்பவர் அவர் மீது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

Who is Nagajothi IPS a straight forward officer?

இதையடுத்து இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தனித்தனியே 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த நாகஜோதி விசாரணை நடத்தி வந்தார். அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளாதவர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில் பாலாஜி வழக்கை நாகஜோதி விசாரித்து பல ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளார் என்கிறார்கள். இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் மத்திய ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாகஜோதி யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நேர்மைக்கு ஒரு முக்கியமான உதாரணமும் உண்டு. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 9 மணிக்கு ராட்சத கிரேன் விழுந்ததில் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் கிரேன் இவ்வளவு பாரம் தாங்காது என நான் பலமுறை கூறினேன். ஆனால் அதை கேட்காத கேமரா துறை ஆட்கள் பார்த்துக்கலாம் ஏத்துங்க என கட்டாயப்படுத்தினார்கள் என வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸுக்கு அனுப்பப்பட்டது. அதன் விசாரணை அதிகாரியாக நாகஜோதி நியமிக்கப்பட்டு அவரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதே ஆண்டு மார்ச் 3ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரை காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவரோ 10.15 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு வந்துவிட்டார். பின்னர் அவரை சரியாக 10.30 மணிக்கு நாகஜோதி அழைத்தார்.

அப்போது உள்ளே சென்ற கமல்ஹாசன் நான் 10.15 மணிக்கெல்லாம் வந்துவிட்டேன் என கூறியுள்ளார். அதற்கு நாகஜோதி, இல்லையே சம்மனில் உங்களை 10.30 மணிக்குத்தானே வர சொல்லியிருக்கிறோம் என்றாராம். அப்போதே கமல்ஹாசனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். அதை தொடர்ந்து விசாரணையை நாகஜோதி தொடங்கினாராம்.

அப்போது உங்கள் பெயர் என்ன என கேட்டுள்ளார். அதற்கு கமல்ஹாசனோ அதிர்ச்சி அடைந்து (உலக நாயகனிடம் பெயரை கேட்டால்) கமல்ஹாசன் என்றாராம். பின்னர் அவருடைய தந்தை பெயர் கேட்டுவிட்டு அனைவருக்கும் தெரிந்த கமலின் சொந்த ஊரையும் கேட்டாராம். எல்லாவற்றுக்கும் மேல் என்ன தொழில் செய்றீங்க என கேட்டாராம்.

அதற்கு கமல் நான் நடிகர் என்றாராம். இது எல்லாவற்றையும்விட "ஈவிபியில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உங்களுக்கு என்ன வேலை" என கேட்டாராம். இது போன்ற கேள்விகளை எல்லாம் கமல் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். பிறகு கிரேன் விபத்து எப்படி நடந்தது என கேட்டாராம். அதற்கு கமல்ஹாசன் அது இயந்திர கோளாறால் நடந்தது என்றாராம்.

ஆனால் நாகஜோதியோ கிரேன் ஆபரேட்டரை விசாரித்து விட்டோம். ஹெவி வெயிட் ஏற்ற வேண்டாம் என உங்களிடமே சொன்னாராம். நீங்கள்தான் அடுத்த ஷாட்டுக்கு போகணும்னு வேறு கிரேன் ஆபரேட்டரை அழைத்து இயக்க சொன்னீர்களாமே என கேட்டதுமே ஆடி போன கமல்ஹாசன் தனக்கு தெரிந்த தகவல்களை விரிவாக சொன்னார். பொதுவாக விசாரணைக்கு என வந்தால் சாமானியரிடமும் உங்கள் பெயர் என்ன என தான் கேட்பார்கள். அதே பாணியை உலக நாயகனுக்கும் நாகஜோதி பிரயோகித்துள்ளார். அந்த வழக்கிலும் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+