Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தியின் ‛ரைட்ஹேண்ட்’.. விஜயை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி யார்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்ரவர்த்தி இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் அவரை சந்தித்து பேசினார். இவர்கள் 2 பேரும் 2 மணிநேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் பிரவீன் சக்ரவர்த்தி யார்? அவர் ராகுல் காந்திக்கு எவ்வளவு நெருக்கமானவர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தவெக கட்சி போட்டியிட உள்ளது. இதற்கான பணிகளை விஜய் மற்றும் தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர். விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார். மேலும் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.

vijay praveen chakaravarthy congress tvk

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தான் விஜய், காங்கிரஸ் கட்சியை தனது கூட்டணிக்கு இழுக்க நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலமாக சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர முடியும் என்று விஜய் கணக்கு போடுகிறார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் திமுக கூட்டணி அதிக இடங்களை தராது. இதனால் தவெக கூட்டணியில் சேரலாம் என்று விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டில் இன்று முக்கிய சந்திப்பு நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி, விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இவர்கள் 2 பேரும் சுமார் 2 மணிநேரம் வரை பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் விவகாரங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்துள்ளனர். குறிப்பாக கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது

இந்த திடீர் சந்திப்பு என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறதா? திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறுகிறதா? என்ற யூகங்களை உருவாக்கி உள்ளது. இது தமிழக அரசியலிலபேசும் பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் பிரவீன் காந்தி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு: பிரவீன் சக்ரவர்த்தி இவர் அடிப்படையில் பொருளாதார நிபுணர். தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். இவர் முதலீட்டு வங்கி, மைக்ரோசாப்ட், ஐபிஎம் உள்ளிட்டவற்றில் பணியாற்றியவர். அதன்பிறகு ராகுல் காந்தி நேரடியாக அவரை காங்கிரஸ் கட்சியில் இணைய கூறினார். இதையடுத்து பிரவீன் காந்தி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2017 ல் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இப்போது ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான நபராக உள்ளார். ரைட் ஹேண்ட் என்றே சிலர் சொல்கின்றனர். அதேபோல் ராகுல் காந்திக்கு தேர்தல் சார்ந்த வியூக வகுப்பாளர் என்றும் சொல்லப்படுகிறார். கடந்த 2023ம் ஆண்டில் ராகுல் காந்தி பிரிட்டன் சுற்றுப்பயணம் செய்தபோது பிரவீன் காந்தி உடன் சென்றார். தற்போது பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் புரொபஷனல் காங்கிரஸ் (Professional Congress) மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பிரிவு என்பது காங்கிரஸ் கட்சியில் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கானதாகும். அதுமட்டுமின்றி தொழில் சார்ந்த சீர்த்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும்.

மேலம் கடந்த 2019 ம்ஆண்டில் ப சிதம்பரம் உடன் சேர்ந்து NYAY வரைவு பணி மற்றும் காங்கிரஸ் கட்சியை நவீனப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி கொடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். அதன்பிறகு கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை மற்றும் தேர்தல் சார்ந்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினார்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க காங்கிரஸ் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தனி குழுவை அமைத்தது. அந்த குழுவின் பெயர் EAGLE. அதன் உறுப்பினராகவும் பிரவீன் சக்ரவர்த்தி உள்ளார். இந்த குழுவினர் தான் ராகுல் காந்தியின் ஓட்டு திருட்டு தொடர்பான டேட்டாக்களை தயாரித்து வழங்கி வருகிறது.

மேலும் கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தமிழகத்தில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. திமுகவினருக்கும், இவருக்கும் பஞ்சாயத்து உள்ளது. இதனால் திமுக அவரை களமிறக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மயிலாடுதுறை தொகுதியில் சுதா என்பவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது. தற்போது அவர் எம்பியாகி உள்ளார். இப்படியான சூழலில் தான் தவெக தலைவர் விஜயை , பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+