ஜிகர்தண்டா XX படத்துக்கு சென்று அடிவாங்கிய அமைச்சர் மகன்.. லேசுபட்ட ஆள் இல்லையாமே! யார் இந்த ரமேஷ்?
சென்னை: திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டு இருந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் மீது மர்ம கும்பல் கொடூரமாக தாக்கி இருக்கும் நிலையில், அவர் யார் என்று விரிவாக பார்ப்போம்.
11 முறை சட்டமன்ற உறுப்பினர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஸ்டாலின் என மூன்று முதலமைச்சர்களின் ஆட்சியில் பல்வேறு இலாக்களில் அமைச்சர் என தமிழ்நாடு அரசியலிலும், திமுகவிலும் சீனியர் அரசியல்வாதியாக வலம் வருபவர் சாத்தூர் ராமச்சந்திரன் எனப்படும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். தமிழ்நாடு அமைச்சர்களிலேயே துரைமுருகனுக்கு அடுத்து மூத்த அமைச்சராக அறியப்படுகிறார். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் அமைச்சரின் 2 வது மகன் ரமேஷ் தனது மகன் கதிருடன் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்து உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் படம் பார்ப்பதற்காக சென்று இருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இரவு காட்சிக்கு முன்பதிவு செய்து அவர்கள் படம் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களின் பின் சீட்டில் அமர்ந்து இருந்த 6 பேர் கொண்ட கும்பல் அசிங்கமான வார்த்தைகளை கொண்டு கூச்சலிட்டபடியும், விசில் அடித்தபடியும் இருந்தனர். இது ரமேஷுக்கும் சக பார்வையாளர்களும் தொந்தரவாக இருந்துள்ளது. எனவே அவர்களிடம் ரமேஷ் ஆட்சேபனை தெரிவித்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ரமேஷிடம் தகராறு செய்ததாகவும் ஒருகட்டத்தில் அவரையும் அவரோடு வந்த மகனையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ரமேஷின் மகன் கதிருக்கு ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. திரையரங்க நிர்வாகம் தலையிட்டு இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தபோதே, தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலும் திரையரங்கின் அவசர வாயில் வழியாக தப்பிச்சென்றது. காயமடைந்த அமைச்சரின் பேரன் கதிர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்பது கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தாக்கப்பட்ட ரமேஷ் அமைச்சரின் 2 வது மகனாவார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் நாராயண பிரதீப் தொழில்களை கவனித்து வருகிறார். அரசியல் தலையீடு காட்டவில்லை. அமைச்சரின் மகளின் கணவர் சென்னையில் பிரபல மருத்துவராக உள்ளார். ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மருத்துவம் பார்க்கும் அளவுக்கு நெருக்கமாக உள்ளார்.
ஆனால், திரையரங்கில் தாக்கப்பட்ட ரமேஷுக்கு தந்தையைபோல் அரசியலில் ஆர்வம் அதிகம். ஆனால், அவருக்கு 2015 சமயத்தில் கடன் அதிகமாக இருந்ததாகவும், இதனால் சொத்துப் பிரச்சனை, குடும்ப பிரச்சனை ஏற்பட்டு தனது தந்தை அமைச்சர் ராமச்சந்திரனோடு ரமேஷுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னுடைய தந்தையின் பழைய கட்சியான அதிமுகவில் இணைந்தார் ரமேஷ். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் காரணமாக ரமேஷ் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரச்சனைகள் தீர்ந்து மனக்கசப்பு மறந்து தனது தந்தையோடு இணக்கமாக ரமேஷ் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications