ஒரு நாள் விட்டிருந்தாலும் துபாய் தப்பியிருப்பார் பெண் சீடர் சுஷ்மிதா.. விசாரணையில் பரபரப்பு தகவல்
சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு வலதுகரமாக செயல்பட்ட சுஷ்மிதா சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவி, இவர் இன்றைய தினம் துபாய்க்கு தப்பி செல்ல ஆயத்தமாகியிருந்தது தெரியவந்தது.
Recommended Video
கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் காசியாபாத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இவர் நேற்று முன் தினம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவருக்கு வலதுகரமாக இருந்த பெண் பக்தை சுஷ்மிதா என்பவரையும் நேற்று மாலை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

6 மாதக் குழந்தை
இந்த பெண் சீடர் சுஷ்மிதா நள்ளிரவில் 6 மாதக் குழந்தையுடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து தனது குழந்தையை கணவன், தாய், தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.

முன்னாள் மாணவி
இவர் சிவசங்கர் பாபாவின் வலதுகரமாக செயல்பட்டவர். இவர் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவியாவார். பட்டப்படிப்பு படித்துள்ள இவர் வெளிநாட்டில் சென்று வேலை பார்த்தவர். பின்னர் அவருக்கு பள்ளி வளாகத்திலேயே சிவசங்கர் பாபா ஒரு வீடு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

கைது செய்த போது கதறல்
இந்த நிலையில் சுஷ்மிதாவுக்கு திருமணம் ஆனவுடன் அவர் கணவருடன் சென்னையில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது. இவரை போலீஸார் கைது செய்த போது தன்னை விட்டுவிடுமாறு கதறி அழுதார்.

துபாய் தப்பிச் செல்ல திட்டம்
இவர் துபாய் தப்பிச் செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. சிவசங்கர் பாபாவின் சொகுசு அறைக்குச் சென்றால் பெரிய ஆளாக்கிவிடுவார் என மாணவிகளை மூளைச்சலவை செய்து அழைத்துச் சென்றவர் சுஷ்மிதா என கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications