"தூண்டிலில்" சசிகலா?.. புட்டு புட்டு வெச்சிட்டாரே.. ஜெ. முகத்தில் துளை.. நொறுங்கிய யூகம் + விவாதம்
ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அது விவாதத்தை கிளப்பி விட்டு வருகிறது
சென்னை: ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பான ரிப்போர்ட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், இது 2 விதமான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், இழுபறியாக விசாரணை நீடித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்குள் அதிமுக ஆட்சியும் முடிந்துவிட, திமுக அரியணை ஏறியது..

முகத்தில் ஹோல்
பின்னர், சுமார் 5 வருடங்களுக்கு பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஒப்படைத்தார்.. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்றைய தினம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புயலை வீச ஆரம்பித்துள்ளது.. குறிப்பாக, சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மயக்கம்
மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது. 2012-க்குப் பிறகு ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை, ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை, ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருக்கிறது என்றெல்லாம் ஆணையம் புட்டு புட்டு வைத்துள்ளது...

முகத்தில் துளை
எனவே, குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் தலையிடவில்லை என்று சசிகலா மறுத்துள்ளார்.. என்மீது பழி போடுவது அபாண்டம்.. இப்படி ஒரு பொய்யான அபத்தமான ஒருகருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

என்பாமிங்
ஒருபக்கம் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய, மறுபுறம் சசிகலா மறுப்பு சொல்ல, உண்மையிலேயே என்ன நடக்கிறது? ஆணையம் சொல்வது சரியா? சசிகலா சொல்வது சரியா? என்ற இருபெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன.. இது தொடர்பான அலசல்களும் இணையத்தில் வெடித்து கிளம்பி உள்ளன.. இப்படி ஒரு ஆணையம் வேண்டும் என்று கேட்டது யார்? அதிமுகவே இப்படி ஒரு ஆணையத்தை நியமித்து, பிறகு கிடப்பிலும் போட்டுவிட்டது.. திமுக ஆட்சிக்கு வந்து இந்த ஆணையத்தை கையில் எடுக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.. மேலும் பல வதந்திகளை தெளிவுபடுத்தி உள்ளது..

முகத்தில் துளை
ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஏற்கனவே அதிமுகவின் மனோஜ் பாண்டியன் கூறியிருந்தார்... அவரது உடலில் விஷத்தின் தடயம் எதுவும் இல்லை என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.. அதனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமற்றது என்று நிராகரிக்கப்பட்டள்ளது.. ஜெயலலிதாவை எவரோ மரக்கட்டையால் தாக்கியதால், அவர் மயங்கி விழுந்தார் என்று பொன்னையன் கூறியிருந்தார்.. ஆனால் அவரே வதந்திகள் அடிப்படையில் சொன்னதாக விசாரணையில் ஒப்புக் கொண்டார்.. பிறகு, ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்தபோது, அவரது முகத்தில் துளைகள் இல்லை என்று டாக்டர் சுதா சேஷையன் தெரிவித்துவிட்டார்.. உடல் ரீதியான வன்முறைக்கு எந்த தடயமும் காணப்படவில்லை என்பதையும் இந்த ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

ஐவாஷ்
ஒருபக்கம் கண்துடைப்புக்காக ஆறுமுகசாமி ஆணையத்தை நியமித்தாலும், சில உண்மைகள் வெளிப்பட்டுள்ளதுடன், இந்த ஆணையமே இன்று அதிமுகவுக்கு இன்று செக் வைக்கும் அளவுக்கு போய்விட்டது என்கிறார்கள். மற்றொருபுறம் ஆறுமுகசாமி ஆணையம் நேர்மையாகவே செயல்பட்டாலும், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தை அணுகியிருக்க வேண்டும்... ஆனால் பெரும்பாலும் யூகங்களாகவே உள்ளதால், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை முழுமையாக ஏற்க முடியவில்லை.. சசிகலா & எடப்பாடியை கட்டம் கட்டியே இந்த அறிக்கை தயாராகி உள்ளதாக தெரிகிறது.. இந்த ஆணைய அறிக்கையில் அரசியல் கலந்திருக்கிறது.. ஆக மொத்தம் இது சசிகலாவை மட்டுமே சுற்றிப்பின்னப்படும் வலை என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
-
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications