இதோ பாருங்க என் கையில்! எடப்பாடி ஒன்று சொல்ல.. குறுக்கே புகுந்த எவ வேலு.. யார் சொல்றது உண்மை?
சென்னை; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் எவ வேலு இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயம் குறித்து கேள்விப்பட்டதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். முதல் ஆளாக இந்த விவகாரத்தில் லீகல் டீமை அனுப்பி எடப்பாடி வழக்கு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.
அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
விஷச் சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ், விஷ சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர்.
அதேபோல் நேற்று சட்டசபை. ஆனால் எடப்பாடி பழனிசாமி சட்டசபை செல்லவில்லை. மாறாக அவர் நேரடியாக கள்ளக்குறிச்சி செல்ல முடிவு செய்துள்ளார் . அங்கே சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
கள்ளச்சாராயம் விற்கப்பட்ட பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதி. நகரத்தின் மையப்பகுதியில் காவல்நிலையத்தின் பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுமா?.. இவ்வளவு உயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்த நிர்வாக திறமையற்ற ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த அரசே செயல்படாமல் உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினே சொல்கிறார். நான் இரவில் தூங்கி காலையில் எழுந்ததும் என் கட்சி நிர்வாகிகளால் எந்த பிரச்சினை ஏற்படுமோ என்று அவரே சொல்லியிருக்கிறார். கட்சி அவரது கட்டுப்பாட்டிலேயே இல்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்து இருப்பது மன வேதனை அளிக்கிறது.
பச்சை பொய் பழனிச்சாமி 😡
— தூய துறவி (@VSK_Talks) June 20, 2024
மருந்து பெயரே வாய்ல வரல
ஆனா பொய் சொல்ல மட்டும் சரலமா வாய் வருது. 💦 pic.twitter.com/vC3Su2qC1M
மருத்துவமனையில் கெமிக்.. கோமிக்.. கோமிக் பேசோப் என்ற மருந்து தேவை. அந்த மருந்து விஷச்சாராய பிரச்னையை தீர்க்கும். அந்த மருந்து கூட இங்கே இல்லை. தமிழ்நாடு முழுக்க இல்லை , என்று கூறி உள்ளார்.
பதிலடி: எடப்பாடி பேச்சுக்கு அமைச்சர் எவ வேலு பதிலடி கொடுத்துள்ளார். அதில், அந்த மருந்தெல்லாம் தமிழ்நாடு முழுக்க இருக்கிறது. முக்கியமாக கள்ளக்குறிச்சியில் எல்லாம் மருத்துவமனையிலும் இருக்கிறது. ஒவ்வொரு நோயாளி பக்கத்திலும் அந்த மருந்து வைக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள் சொல்வதில் உண்மை இல்லை. என் கையில் பாருங்க.. ஆதாரத்திற்கு ஒரு பாக்கெட்டை எடுத்து வந்துள்ளேன், என்று எவ வேலுபதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications