Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டேவிட்சன் ஆசீர்வாதம்".. குறி வைக்கும் பாஜக.. காரணமே இதுதான்.. புட்டு புட்டு வைத்த கரு.நாகராஜன்

டேவிட் ஆசீர்வாதத்தை பாஜக குறி வைத்து புகார் சொல்ல என்ன காரணங்கள் உள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: டேவிட் ஆசீர்வாதம் மீதான புகார்களை பாஜக திரட்டி, ஆளுநரிடம் தந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தப்படியும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.. இதற்கு என்ன காரணம் என்று தமிழக பாஜக சீனியர் தலைவர் கரு.நாகராஜன் விளக்கம் தந்துள்ளார்.

வழக்கமாக திமுக ஆட்சி செய்தால், அதிமுக கேள்வி கேட்கும்.. அதிமுக ஆண்டால், திமுக விமர்சிக்கும்.. இதுதான் நடைமுறை.. ஆனால், இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக மட்டுமே அரசை கடுமையாக சாடி வருகிறது..
அதிமுக செய்ய வேண்டிய போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களையும் பாஜகவே செய்து வருகிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து விட்ட நிலையில், பாஜக இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டும் வருகிறது.

கேபி ராமலிங்கம்

கேபி ராமலிங்கம்

அந்தவகையில், நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்து மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீதான புகாரை தந்திருக்கிறார்.. குறிப்பாக, உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் குறித்த புகாரை ஆளுநரிடம் தந்திருக்கிறார்.. இதுகுறித்து பாஜகவின் மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கமும் செய்தியாளர்களிடம், "போலி பாஸ்போர்ட் விவகாரத்திற்கு உளவுத்துறை அதிகாரி டேவிட்சன் ஆசீர்வாதம்தான் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்..

கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

அவரைப்போன்ற தவறான அதிகாரிகள் உளவுத்துறையில் இருப்பதால்தான் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.. இதற்கான ஆதாரங்களையும் ஆளுநரிடத்தில் வழங்கி இருக்கிறோம்" என்றார். இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனும் இதே கருத்தை செய்தியாளர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னதாவது:

டேவிட்சன்

டேவிட்சன்

"தற்போதைய உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், 2019-ல் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தார்.. அப்போது, மதுரையில் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கக் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற தவறுகள் தொடர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. அங்கிருந்த கமிஷனர், இப்போது உளவுத் துறை ஏடிஜிபியாக இருப்பதால் குற்றச்சாட்டை சரியாக விசாரிக்க மாட்டார்கள்.. அதனால்தான், அவர் உள்ளிட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யுமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது..

மாமல்லபுரம்

மாமல்லபுரம்

மதுரை ஏர்போர்ட்டில் போலி பாஸ்போர்ட் பிடிபட்டதால், இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.. மதுரை அவனியாபுரம் செம்பூரணி தெருவில் மட்டும் 67 போலி பாஸ்போர்ட்கள் தரப்பட்டுள்ளன.. போலி பாஸ்போர்ட் விநியோகத்துக்கு தனி கும்பல் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டியிடம் மனு தந்துள்ளோம்.. அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க போகிறது.. இதற்காக பிரதமர் மோடியை அழைத்திருக்கிறார்கள்..

போட்டோ எங்கே?

போட்டோ எங்கே?

ஆனால், சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் பிரதமர் போட்டோவே காணோம்.. முதல்வர் போட்டோ மட்டும் பெரிதாக இருக்கிறது... பிரதமரையும் அழைத்து, காழ்ப்புணர்ச்சியுடன் இதில் அரசியல் செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பிரதமர் போட்டோவை அவர்கள் வைக்காவிட்டால், பாஜக சார்பில் நாங்களே வைப்போம். கடந்த முறை பிரதமர் சென்னை வந்தபோதே, விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தது.. பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை, ஜனநாயக முறைப்படி நடத்தவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு... பழைய தவறுகள் மறுபடியும் நடக்காது என்றே நினைக்கிறேன்" என்றார்..

டேவிட்சன் - குறி

டேவிட்சன் - குறி

இத்தனை காலமாக, திமுக அமைச்சர்களின் ஊழல்பட்டியலை வெளியிடுவோம், மாதம் ஒரு லிஸ்ட் வெளிவரும் என்று பாஜக அறிவித்திந்த நிலையில், அதை பற்றின தகவல்கள் எதுவுமே வெளிவரவில்லை.. இப்போதுள்ள சூழலில் ஊழல் லிஸ்ட்டை வெளியிட்டால் ஆட்சி கலைந்துவிடும், அதனால் 4 வருஷம் பொறுமையாக இருப்போம் என்று அண்ணாமலை அதற்கு காரணமும் நேற்று முன்தினம் சொல்லி இருந்தார்.. இப்போது அடுத்தக்கட்டமாக, உளவுத்துறை மீது புகார்களை ஆளுநர் வரை கொண்டு சென்றுள்ளது.. உளவுத்துறையை டேமேஜ் செய்தால், நிச்சயம் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நேரடியாக கெட்டப்பெயரை பெற்று தரும் என்பதாலேயே, டேவிட்சன் மீது குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+