• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எலும்பும் தோலுமாய்".. நம்ம விஜயகாந்த்தா இது.. இன்று தேறி வரும் உடல்நிலை.. தேமுதிக புது தலைவர் அவரா?

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவுக்கு புதிய கட்சி தலைவர் யார் என்ற சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், அதை விஜயபிரபாகரன் தெளிவுபடுத்தி உள்ளார்.

பொதுவாக தமிழக மக்களுக்கு விஜயகாந்த் மேல் ஸ்பெஷல் பாசம் உள்ளது... அபரிமிதமான அன்பு உள்ளது.. அவருக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், முதலில் கோயிலுக்கு போய் அவருக்காக வேண்டி கொள்ளும் அளவுக்கு அக்கறை மிகுந்தவர்கள்.

ஆரம்பிக்கலாங்களா? 2 நாள் பதுங்கிய கொரோனா புலி பாய்ச்சல்! இன்றைக்கு மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஆரம்பிக்கலாங்களா? 2 நாள் பதுங்கிய கொரோனா புலி பாய்ச்சல்! இன்றைக்கு மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா?

இது வெறும் நடிகர் என்பதால் மட்டும் விஜயகாந்த்துக்கு கிடைத்த பெருமை கிடையாது.. அவருடைய கசியும் ஈர மனசுதான்..!

 மனிதநேயம்

மனிதநேயம்

அதேசமயம், தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்தவுடன் திடீரென தனக்காக போட்டுக்கொண்ட திரையும் கிடையாது.. இயல்பாகவே விஜயகாந்த்துக்கு உள்ள மனிதநேயம்தான், இப்போதுவரை தொடர்கிறது. பொதுமக்களுக்கு இலவச மருத்துவமனை அமைத்து, அதனால், உயிர்பெற்று இன்று நடமாடுபவர்கள் லட்சத்திற்கும் மேல் என்று பெருமையாகவே சொல்லலாம்! அரசியலையும் தாண்டி ஒருவர் விரும்பப்படுவது இந்த காலத்தில் அபூர்வம்.. அதில், மிக முக்கியமானவர் விஜயகாந்த்..

 எலும்பும் தோலுமாய்

எலும்பும் தோலுமாய்

கடந்த சில வருடங்களாகவே உடம்பு சரியில்லாமல் போய்விடவும் தளர ஆரம்பித்துவிட்டார்.. தற்போதுவரை சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வதால், தோற்றத்தில் மாறுபாடுகள் ஏற்படலாம் என்றாலும், தற்போது அவர் மெலிந்த உருவத்தில் காணப்படுவது பலரையும் கண்களை கலங்க வைத்து வருகிறது.. விஜயகாந்த்தை இப்படி எங்களால் பார்க்க முடியவில்லை. தனித்து கம்பீரமாக வலம் வந்தவராச்சே.. என்று பரிதவித்து சொல்வோர் அதிகம்.. இப்போது, நீரழிவு பிரச்சனையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது என்று அக்கட்சி அறிக்கையும் வெளியிட்டிருந்தது..

 விஜயபிரபாகரன்

விஜயபிரபாகரன்

எனினும், விஜயகாந்த் கட்சியை கவனித்து கொள்ள முடியாததால், இன்று, தேமுதிக கட்சி கரைந்துவிட்டது.. அதன் செல்வாக்கை இழந்துவிட்டது.. தொடர் தோல்விகளால், முக்கிய நிர்வாகிகள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் என பலரும் பல்வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர்.. இந்நிலையில், கட்சியின் தலைவராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன.. ஆனால், எந்தவித அறிவிப்பும் வரவில்லை.. இப்போது விஜயபிரபாகரன் பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில், அவரே இதை செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தி உள்ளார்.

 பிரேக்கிங் செய்தி

பிரேக்கிங் செய்தி

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குறித்து வெளிவரும் வதந்திகள் மிகவும் கண்டனத்துக்குரியது.. ஒரு சில நிறுவனங்கள் பிரேக்கிங் செய்திகளுக்காக இதுபோன்ற தகவல்களை வெளியிடுகின்றனர். அதிமுக பிரச்சனை உட்கட்சி விவகாரம் அதில் தேமுதிக தலையிட விரும்பவில்லை. தேமுதிகவில் இதுவரை எந்த பதவியும் எனக்கு வழங்கப்படவில்லை. பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

சில தினங்களுக்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் ஒரு பேட்டி தந்தார்.. அதில், "யார் யாரோ நாங்கள்தான் தமிழ்நாட்டுக்கு எதிர்க்கட்சி என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான்" என்றார்.. பிரேமலதா எந்த நம்பிக்கையில் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை, ஆனால் அந்த கட்சி செல்ல வேண்டிய தூரமும், அடைய வேண்டிய இலக்கும் இன்னும் நிறைய உள்ளது.. அதேசமயம், விளிம்பு நிலை மற்றும் வெகுஜன மக்களுக்காக பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மக்களின் நன்மதிப்பை பெற்றுவிடுவது நடைமுறை வரலாறு.. இதை தேமுதிகவும் உணர வேண்டும்..!

English summary
Who is the new party leader of vijayakanths dmdk and what did vijayaprabhakaran say விஜயகாந்தின் தேமுதிகவுக்கு புதிய கட்சி தலைவராக யார் பொறுப்பேற்பார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X