லிஸ்டை எல்லாம் மாற்ற முடியாது.. தமிழ்நாடு டிஜிபியை தேர்வு செய்வதில் சிக்கல்.. அடம் பிடிக்கும் டெல்லி
சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைவரை (DGP) நியமிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் டிஜிபியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைவரை (DGP) நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. யுபிஎஸ்சி பரிந்துரைத்த மூன்று டிஜிபிக்களின் பெயர்களை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளாததற்கான காரணங்களை விளக்கி தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் அளித்த மனுவை யுபிஎஸ்சி நிராகரித்துவிட்டது.

அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, தமிழ்நாடு அரசுக்கு யுபிஎஸ்சி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், டிஜிபி பதவிக்கு பொருத்தமான அதிகாரிகள் அடங்கிய பட்டியலை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. யுபிஎஸ்சி - தமிழக அரசு கலந்து ஆலோசித்து ஒரு லிஸ்டை எடுக்கும். அந்த லிஸ்டில் இருந்தே முதல்வர் டிஜிபி ஒருவரை தேர்வு செய்வார். யுபிஎஸ்சி இந்த லிஸ்டை அப்டேட் செய்ய போவதில்லை என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மனுவை நாங்கள் ஆய்வு செய்து முடித்துவிட்டோம்; தற்போதைய நிலையே தொடரும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு புதிய டிஜிபி/காவல்துறை தலைவர்
2025 ஆகஸ்ட் 30 அன்று சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய டிஜிபி/காவல்துறை தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே (ஆகஸ்ட் 30, 2025) யுபிஎஸ்சிக்கு தகுதியுள்ள டிஜிபி-அதிகாரிகளின் பட்டியல் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதில் இருந்தே யுபிஎஸ்சி லிஸ்டை தயார் செய்யும். ஆனால், ஆகஸ்ட் 29, 2025 அன்றுதான் இந்த பட்டியல் வழங்கப்பட்டது.
டிஜிபி வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் மூத்த அதிகாரி ஒருவர் தனது பெயரை பட்டியலில் சேர்க்கக் கோரி வழக்குத் தொடர்ந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி ஜி. வெங்கட்ராமன் டிஜிபி/காவல்துறை இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து மதுரை வழக்கறிஞர் ஹென்றி திபேன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.
டிஜிபிக்கள் நியமனம் தொடர்பான பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், யுபிஎஸ்சி இந்த பட்டியலை விரைந்து இறுதி செய்யுமாறு கோரியதுடன், நிரந்தர டிஜிபியை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
யுபிஎஸ்சி கூட்டம்
இதையடுத்து யுபிஎஸ்சி செப்டம்பர் 26, 2025 அன்று குழு கூட்டத்தை நடத்தியது. சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூன்று மூத்த அதிகாரிகள் டிஜிபி பதவிக்கு பொருத்தமானவர்கள் என்று பரிந்துரைத்தது. ஆனால், யுபிஎஸ்சி பரிந்துரைத்த அதிகாரிகள் பட்டியல் மாநில அரசுக்கு ஏற்புடையது அல்ல என்று தலைமைச் செயலாளர் யுபிஎஸ்சிக்கு கடிதம் எழுதினார். தனது நிலைப்பாட்டிற்கு விரிவான விளக்கத்தையும் அளித்தார்.
நிரந்தர டிஜிபி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சனம் தெரிவித்தார். இதையடுத்து, மாநில சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி அக்டோபர் 22 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அரசின் கருத்துக்களை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும், தனது விருப்பப்படி ஒரு அதிகாரியை டிஜிபியாக நியமிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு அரசு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்தபோதிலும், யுபிஎஸ்சி சில அதிகாரிகளின் பெயர்களை இறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் தனது உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் கூறினார். இதையடுத்தே தமிழ்நாடு காவல்துறை தலைவரை (DGP) நியமிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் டிஜிபியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications