பறந்த ஆர்டர்.. நீங்க 3 பேரும் உடனே கிளம்பி வாங்க.. பரபரக்கும் "மேலிடம்".. யார் இந்த லெனின் பிரசாத்

அடுத்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யார் என்ற தேர்வு நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை வரப் போகிறது.. இதற்காக 3 பேரை டெல்லிக்கு அழைத்துள்ளது மேலிடம்..!

நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 வருடமாக தலைவர் யாருமே இல்லை.. ஒரு தேசிய கட்சி தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பெருத்த பலவீனமானதும்கூட..

சோனியா காந்திக்கு உடம்பு சரியில்லாத நிலையில், ராகுலும் பொறுப்பேற்காத நிலையில், இது சம்பந்தமாக கடிதம் எழுதி அதிருப்திக்கு உள்ளானவர்களை சமாதானப்படுத்த முடியாத நிலையில், வேறு தலைவர்களும் நியமனம் செய்ய முடியாத நிலையில், காங்கிரஸ் தள்ளாடிகொண்டிருக்கிறது.

பலவீனங்கள்

பலவீனங்கள்

இந்த பலவீனங்களை சரிக்கட்ட ராகுலும் களம் இறங்கினால் மட்டுமே ஓரளவு வாக்குகளை தக்க வைக்க முடியும் என்ற நிலைமை எப்போதோ உருவாகிவிட்டது.. ஆனாலும் தன் பொறுப்பை உணராமல், ராகுல் காந்தி நடந்து கொள்வதாக கட்சிக்குள்ளேயே ஒரு முணுமுணுப்பு உள்ளது.. ராகுலின் அரசியல் நடவடிக்கைகளை பாஜக, மற்றும் திரிணாமுல் கட்சிகள் ஒரு பிரச்சனையாகவே கிளப்பி வருகின்றன.. ஆனால், 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும்கூட, பெரிதாக பிரச்சாரங்களில் பங்கேற்காதது, தொண்டர்களிடையே அதிருப்தியை பெருக்கிவிட்டது.

ராகுல்காந்தி

ராகுல்காந்தி

அதாவது, உபி மாநிலத்தில்கூட ராகுலின் செயல்பாடுகள் குறைவாக உள்ளதாகவும், ராகுல் முழுவீச்சில் இறங்கினால்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மணிப்பூர், போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஓரளவு நிமிரும்.. இல்லாவிட்டால் வழக்கம்போல் தேங்கி கிடக்கும் நிலைதான் இந்த முறை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து சொன்னார்கள்.. இப்போது 5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு இதை அதிகமாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

 ராகுல்காந்தி

ராகுல்காந்தி

இந்நிலையில்தான், அக்கட்சி தன்னுடைய வேகத்தை இப்போது கூட்ட ஆரம்பித்துள்ளது.. இப்போதைக்கு சோனியா காந்தியே இடைக்கால தலைமையில் இருந்தாலும், சுற்றிசுழன்று கட்சியை வளர்க்க, ராகுல் போன்றோர் தேவை என்பதே தற்போதைய காங்கிரஸ்காரர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.. காங்கிரஸுக்கு முழு நேர தலைவர் தேர்வு செய்யப்படுகிறபோது, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் புதிய தலைவர்கள் பொறுப்பில் இருப்பார்கள் தமிழக எம்பிக்கள் ஏற்கனவே சொல்லி இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

 முதலிடம் யாருக்கு?

முதலிடம் யாருக்கு?

இந்நிலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆரம்பமாகிவிட்டது. அதற்காக 3 பேரின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான, அசன் மௌலானா எம்எல்ஏவின் கட்சி பதவி காலம் முடிந்த நிலையில், இளைஞர் காங்கிரசுக்கு தலைவர் உட்பட நிர்வாகிகள் தேர்வு குறித்து மொபைல் செயலி மூலம் தேர்தல் நடத்தப்பட்டது.. இதில், முதலிடத்தில் வந்த லெனின் பிரசாத், அடுத்தடுத்து வாக்குகளை வாங்கிய ஜோஸ்வா, நவீன் ஆகிய மூவரையும் டெல்லிக்கு அழைத்துள்ளது காங்கிரஸ் மேலிடம். இளைஞர் காங்கிரஸ் தேர்தலை அடுத்து கட்சியின் உள்கட்சித் தேர்தலை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி

டெல்லி

முன்னதாக, தேர்வு செய்யப்பட்ட 3 பேரிடமும் நேர்காணல் நடத்த, டெல்லி மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலின் போது, போலி உறுப்பினர்கள் சேர்ப்பு, ஜாதி ரீதியான பிரசாரம், பணம் கொடுத்து உறுப்பினர் சேர்த்த விவகாரம் தொடர்பான புகார்கள், கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் வாயிலாக, டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இடம் பெற்றாலும், அவர்களின் கடந்த கால கட்சி நடவடிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது..

 தலைவர் பதவி

தலைவர் பதவி

அதில், தகுதி மற்றும் திறமையான செயல்பாட்டில் முன்னுரிமை பெறுபவர், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்.நேர்காணல் முடிந்து, 10 நாட்களில் இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை, டெல்லி மேலிடம் நேர்காணலுக்கு அழைத்துள்ளது. நேர்காணல் முடிந்து, விரைவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அறிவிக்கப்பட உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+