நிலைமை "சீரியஸ்".. அடுத்த குறி "அவர்"தான்.. சம்மன் வருதாமே.. "வளையத்துக்குள்" வந்தது யார்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜி விவகாரத்தையடுத்து, அடுத்த குறி யாருக்கு என்ற யூகங்கள் கிளம்ப.. விரைவில் "அங்கே" சம்மன் பாயப்போகிறதாம்.. இதுகுறித்த ஸ்பெஷல் செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

ஆளுங்கட்சி இருக்கும் சூழலிலேயே அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர், அதுவும் மிக மிக முக்கியமான அமைச்சர், அதுவும், முதல்வரின் நேரடி நன்மதிப்பை பெற்ற செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அரசியல் களமே கிடுகிடுத்து காணப்படுகிறது.

Who is the next target and enforcement directorate summons to the tamil nadu government PROs

அமைச்சர்கள்: இத்தனைக்கும் சட்டரீதியான விவகாரம் உட்பட அனைத்து சிக்கல்களையுமே செந்தில் பாலாஜி, நாலாபக்கமும் சமாளித்து மேலெழுந்து வந்தநிலையில்தான், இப்படி ஒரு செக் அமைச்சருக்கு வைக்கப்பட்டுள்ளது. எதற்கும் அசையாத அமைச்சர் செந்தில் பாலாஜியையே, அமலாக்கத்துறை கைது செய்துவிட்டதே என்பதால், திமுக அமைச்சர்களில் சிலருக்கு கிலி சூழ்ந்துவிட்டதாம்.

ஏற்கனவே, டெல்லி டார்கெட் செய்யப்பட்ட லிஸ்ட்டில் மொத்தம் 5 திமுக அமைச்சர்கள் இருப்பதாகவும், அதிலும், 2 அமைச்சர்கள் பெயர் டாப்பில் உள்ளதாகவும் சொல்லப்பட்டது.. ஒருவர் கொலை முயற்சி வழக்கில் சிக்கியவராம்.. மற்றொருவர் பொறியியல் கல்லூரி வைத்து நடத்தி வருபவராம்.. எனவே, இவர்கள் 2 பேரும் வருமான வரி துறை, அமலாக்கத் துறையினரின் வளையத்துக்குள் வரக்கூடும் என்றும் சலசலக்கப்பட்டது.

யார் அந்த நபர்: இதைத்தவிர, திமுகவில் 'பவர்புல்' நபர் ஒருவரை பற்றின ஆவணங்களை, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாம்.

எனினும் இப்போதைக்கு அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டாம்.. சற்று பொறுமை காக்கலாம் என்று உத்தரவு தரப்பட்டுள்ளதாம்.. அநேகமாக அக்டோபர் மாதத்திற்கு முன்பாகவே, அந்த நபர் மீதான நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இதுபோன்ற அடுத்தடுத்த அதிரடிகள், வரும் எம்பி தேர்தலில் தங்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும் என்றும் மேலிடம் நம்புகிறதாம்.

பிஆர்ஓக்கள்: இந்நிலையில், வேறு சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில், மேலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.. இதில் அரசு "பிஆர்ஓ-க்கள்" சிலரும் சிக்கியிருக்கிறார்களாம்.. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இவர்கள் அனைவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 40 நாட்கள் கடந்தும் இதில் அக்கறை காட்டாத போலீஸ், இப்போதுதான் அதில் சீரியஸ் காட்டியுள்ளது.

விரைவில் சம்மன்: இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதால் தான் அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்தது. அந்த வகையில் செந்தில்பாலாஜியை கைது செய்த அமலாக்கத் துறை, வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது. அநேகமாக இந்த வாரத்தில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் தெரிகிறது.

செந்தில் பாலாஜியோடு சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட அந்த அரசு அதிகாரிகள் இப்போதும் அரசு பணியில் இருந்து வருவதால், தங்களுக்கு சம்மன் வரும் என்பதை அறிந்து அவர்கள் நடுக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.. சம்மன் அனுப்பப்படும்போது இந்த விவகாரம் மற்றொரு கோணத்தில் பரபரப்பாகும் என்கிறார்கள் வழக்கை உன்னிப்பாக கவனித்து வரும் அரசு அதிகாரிகள்...

அதிமுக சைலண்ட்: திமுகவுக்குள் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்து, அதிமுக "கப்சிப் மோடுக்கு" சென்றுள்ளது.. முன்புபோல் தமிழக பாஜகவை சீண்டுவதில்லையாம்.. கண்டுகொள்வதுமில்லையாம்.. அந்த பக்கமே போகாமல் ஒதுங்கி, தங்களுடைய தொகுதிகளில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறதாம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+