வசமாக சர்ச்சையில் சிக்கிய "ரோகிணி".. தியேட்டரின் உரிமையாளர் யார் தெரியுமா? யார் இந்த பன்னீர்செல்வம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ள நிலையில் ரோகிணி தியேட்டர் உரிமையாளர் யார் என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

சென்னையில் இருக்கும் மிகவும் பிரபலமான தியேட்டர்களில் ரோகிணி தியேட்டரும் ஒன்று. சென்னை கோயம்பேடு பகுதியில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது.

சென்னையில் அமைந்து இருக்கும் பிரபல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரோகிணி தியேட்டரும் ஒன்று. இந்த நிலையில்தான் தற்போது நரிக்குறவர்களை அனுமதிக்காதது தொடர்பாக ரோகிணி தியேட்டர் நிர்வாகம் சர்ச்சையாகி உள்ளது.

 யார் இவர்?

யார் இவர்?

ரோகிணி தியேட்டரின் உரிமையாளராக பன்னீர்செல்வம் இருக்கிறார். இவர்தான் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். தியேட்டர் உரிமையாளர்கள் இடையே அதிக வாய்ஸ் கொண்டவராகவும் இவர் திகழ்ந்து வருகிறார். தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இவர் தேர்வு செய்யப்பட்ட பின் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தார்.

 விமர்சனம் சர்ச்சை

விமர்சனம் சர்ச்சை

அதே சமயம் இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவர் கொரோனா காலத்தில் தியேட்டர்களை திறக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். முக்கியமாக 50 சதவிகிதத்திற்கும் மேல் அனுமதிக்க கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்த்து சர்ச்சையில் சிக்கினார். இவரின் மகன் ரேவந்த் நடைபாதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல்

தேர்தல்

சென்னை துறைமுகம் தொகுதியில் ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன் வினோஜ் பி செல்வம் கடந்த சட்டசபை தேர்தலில் கூட பாஜக சார்பாக போட்டியிட்டார். இந்த திமுகவின் சேகர்பாபுவை எதிர்த்துப் போட்டியிட்ட இவர் சில சுற்றுகளில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் தற்போது இளம் தலைவராக வினோஜ் பி செல்வம் இருக்கிறார். வினோஜ் பி செல்வம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் இளைஞரணித் தலைவராக உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஊரில்தான் பன்னீர்செல்வம் பிறந்தார்.

மேனேஜர்

மேனேஜர்

இவர்களின் குடும்பம் தற்போது தீவிரமாக பாஜகவில் பணியாற்றி வருகின்றனர். தற்போது ரோகினி நிறுவனத்தின் மேனேஜராக இருக்கும் நிகிலேஷ் சூர்யா இருக்கிறார். இவர் சிங்கப்பூரை சேர்ந்த பிசினஸ்மேன். வினோஜ் பி செல்வத்தின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்தான் தற்போது நரிக்குறவர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தற்போது நரிக்குறவர்களை அனுமதிக்காதது தொடர்பாக ரோகிணி தியேட்டர் நிர்வாகம் சர்ச்சையாகி உள்ளது.

 இப்போது என்ன சர்ச்சை

இப்போது என்ன சர்ச்சை

அங்கே பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் அனுமதிக்காமல் தடுத்துள்ளனர் . இந்த வீடியோசர்ச்சையானது . இதையடுத்து நிகிலேஷ் தலையிட்டு படம் தொடங்கும் முன் அவர்களை படம் பார்க்க வைத்துள்ளார். அதே சமயம் பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற காரணத்தால் சிறுவர்களுடன் வந்தவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்று ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்த விளக்கத்தை பலரும் கடுமையாக எதிர்த்து உள்ளனர். அதே சமயம் உள்ளே சென்ற நரிக்குறவர்களை வீடியோ எடுத்து நிகிலேஷ் வெளியிட்டது போன்ற விவகாரங்கள் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+