அதிமுகவை உடைக்க போகும் "தமிழ்நாட்டு ஷிண்டே".. அவங்கதான்?.. வெளியான சீக்ரெட்.. எடப்பாடிக்கு பெரிய வலை
சென்னை: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி வலிமை அடைவதை பாஜக விரும்பாது. அப்போது ஷிண்டே போன்றவர்களை பாஜக களமிறக்கும். தங்களை மீறி தமிழ்நாடு அரசியலில் திமுகவிற்கு மாற்று என்று யாரும் இருக்க கூடாது என்று பாஜக நினைக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது.டெல்லியில் சமாதான பேச்சு, சென்னையில் நடந்த சமாதான பேச்சுக்கள் எல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில்தான் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு பின் என்ன நடந்தது.. இனி என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் சேர வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு உள்ளது. கட்டாயத்தின் பெயரில்தான் கடந்த 2019, 2021 தேர்தலில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். இப்போது உள்ளடி வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இவர்கள் ஒன்று சேருவார்கள். கூட்டணியில் 20 இடங்கள் வேண்டும், கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம், டிடி வி தினகரனை சேர்க்க வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளது. இதுவும் கூட கூட்டணி முறிவிற்கு காரணம். அண்ணாமலை மட்டுமே கூட்டணி முறிவிற்கு காரணம் என்று சொல்ல முடியாது.
அண்ணாமலையும் கூட்டணி உடைய ஒரு காரணம் அவ்வளவுதான். அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அமித் ஷா உடனே மாற்ற முடியாது. தொண்டர்கள் விரக்தி அடைவார்கள். டைம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அவசரப்பட்டு எடப்பாடி முடிவு எடுத்துள்ளார். இடையில் நடந்தது என்ன? அமித் ஷாவிடம் எடப்பாடி என்ன பேசினார். அங்கே நடந்தது என்ன என்று ஆராய வேண்டும்? இதுதான் முக்கியம்.

அதிமுகவிற்குள் ஏக்நாத் ஷிண்டே வர வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இப்போது அதற்கு சான்ஸ் இல்லை. தேர்தல் நேரத்தில் மோடியை எடப்பாடி எதிர்க்கிறார். கூட்டணி வைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மோடியை எடப்பாடி கடுமையாக எதிர்க்கிறார் என்றால் அப்போது ஏக்நாத் ஷிண்டே வர வாய்ப்பு உள்ளது. பாஜக உள்ளே எடப்பாடிக்கு நெருக்கமான சிலர் இருக்கிறார்கள்.. "அவர்கள்" ( 2 பேர் தான்) ஏக்நாத் ஷிண்டே போல ஆகலாம். எடப்பாடி தனியாக ஸ்ட்ராங் ஆக பாஜக விடாது.
தங்களை மீறி எடப்பாடி வலிமை அடைவதை பாஜக விரும்பாது. அப்போது ஷிண்டே போன்றவர்களை பாஜக களமிறக்கும். தங்களை மீறி தமிழ்நாடு அரசியலில் திமுகவிற்கு மாற்று என்று யாரும் இருக்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. அதிமுக கூட்டணியில் ஓ பி எஸ்ஸுக்கு இவ்வளவு, பாமகவிற்கு, டிடிவி தினகரனுக்கு இவ்வளவு எங்களிடம் 20 சீட் கொடுங்கள். அதை நாங்கள் பிரித்து கொடுத்துக்கொள்கிறோம். நீங்கள் உங்களின் 20 இடங்களில் நில்லுங்கள்.
எங்களுக்கு தரப்படும் 20 இடங்களை நாங்கள் பிரித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான் என்றுள்ளனர். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. அவர் இதை ஏற்றுக்கொள்ளாததே இந்த மோதலுக்கு காரணம். இந்த மீட்டிங் கசப்பான மீட்டிங்தான். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துள்ளார். இந்த மோதலுக்கு இடையில் அண்ணாமலை பேசியது பிரச்சனை ஆகி உள்ளது.
இப்போதுதான் இவர்களை சமாதானம் செய்ய பேச்சு நடக்கிறது. அதிமுக - பாஜக மோதலை சரி செய்ய பலர் முயன்று வருகின்றனர். சில அறிவுஜீவிகள், மாஸ்டர்மைண்டுகள் உட்பட பலர் முயன்று வருகின்றனர். இந்த கூட்டணி அதிமுக, பாஜகவை தாண்டி இன்னும் சிலருக்கு அவசியம். அதனால் அவர்கள் சமாதான பேச்சுக்களை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications