சபாஷ் திமுக.. அப்பாவு பக்கத்தில்.. முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி.. சட்டமன்ற சபாநாயகரின் உதவியாளர்..!
சபாநாயகருக்கு உதவியாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை: தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு உதவியாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சட்டசபை தலைவர் என்பவர் அதிகாரம் மிக்கவர்.. சபையில் குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி, தனது பதவிக்காலம் முடியும் வரை அவர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பு, நேர அளவை முடிவு செய்யக்கூடியவரும் சபாநாயகர்தான்.. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவை குறிப்பில் பதிவிடுவதற்கும் அதை நீக்குவதற்கும் அதிகாரம் படைத்தவரும் சபாநாயகர்.

சபாநாயகர் அப்பாவு
சட்டமன்றத்தில் விதிகளை மீறி நடக்கும் உறுப்பினர்களைத் தற்காலிகமாகவோ, கூட்டத்தொடர் முழுவதுமோ கலந்துகொள்ள தடை விதிக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கு இருக்கிறது.. சட்டமன்றத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த உறுப்பினராவது நடந்து கொண்டால், அதுகுறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு உரிமை உண்டு.. இப்படி வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் பதவிக்கு சில சலுகைகளும் உள்ளன.. அதேபோல, சட்டமன்றத்திற்கு என அவை காவலர்கள் என தனி பொறுப்பும் உள்ளது . அப்படி நியமிக்கப்படுவர்தான் துபாஷ்..

சபாநாயகர்
சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து , சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் , அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். துபாஷ் என்பவர் சபாநாயகர் வருவதை உறுதி செய்யும் நபராக கருதப்படுகிறார். இது முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்த பதவி இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துபேஷ் ராஜலட்சுமி
1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கு தற்போது 60 வயது எட்டியுள்ளது. வரும் மே மாதம் ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் துபாஷ் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளது , அனைவர் மத்தியிலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துபேஷ் பணி
சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வதுதான் துபேஷின் பணி.. சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார்... மறுபடியும் சபாநாயகர் அவர் அறைக்கு செல்லும்போது உடன் செல்வார்.. இவருக்கு தனியாக சீருடையும் வழங்கப்படும்... ஆண்கள் மட்டுமே இத்தனை காலமும் அணிந்து வந்த நிலையில், இப்போது பெண்களும் அணிய ஆரம்பித்துள்ளனர்.

ராஜலட்சுமி
அப்படி தற்போது பேசப்படுபவர்தான் ராஜலட்சுமி.. 1990ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர் ராஜலட்சுமி, இப்போது இவருக்கு 60 வயதாகிறது.. வரும் மே மாதம் ராஜலட்சுமி ஓய்வு பெற உள்ளார்... இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த துபேஷ் பொறுப்பிற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.. இது பல தரப்பினருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.. இவ்வளவு நாள் துபேஷ் என்ற ஆண்களே இருந்த நிலையில், முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் ஆகி உள்ளார்.

திமுக ஆட்சி
இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த பொறுப்பு இருந்து வந்தாலும்கூட முதன்முறையாக, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான், இந்த பணியில் ராஜலட்சுமி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது... யூனிபார்முடன் பெண் துபாஷ் ராஜலட்சுமியின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பாரதியின் கனவு
ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல், எல்லா வேலைகளையும் பெண்கள் செய்யும் காலம் இதுவென்றாலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகருக்கு உதவியாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்து வருகிறது.. அத்துடன், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவும் நினைவாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications