Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெய்லர் கடை பொண்ணு.. கவர்ச்சியில் கவிழும் சபலிஸ்ட்கள்.. போலீஸ் அலர்ட் பண்றது இதுக்குதான்.. ஜாக்கிரதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்நுட்பம் பெருக பெருக, நூதன மோசடிகளும் பெருகியபடியே வருகின்றன.. பெண்களின் செல்போன் நம்பர் விற்பனைக்கு என்று புது மோசடி ஒன்று ஆன்லைனில் கிளம்பியிருக்கிறதாம். அது என்ன?

நாளுக்கு நாள் நடக்கும் புதுபுது விநோத மோசடிகள் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.. அதிலும் கிரைம் போலீஸார், இதுகுறித்து பலமுறை அலர்ட் விடுத்து வருகிறார்கள்.

Who is this Famous Actress and Phone numbers sale scam posting on telegram, alert Chennai Police

பிரபல நடிகை: பிரபல நடிகைகளின் முகத்தை மார்பிங் செய்வது, லிங்க்குகளை அனுப்ப சொல்லி, அப்பாவி மக்களின் வங்க கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்வது, என மோசடிகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலும் சிக்கிவிடுவது பெண்களாகவே உள்ளனர். அந்தவகையில், பெண்களை பாதிக்கும் நூதன முறை சைபர் கிரைம் ஒன்று தற்போது நடந்துள்ளது.

பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் பணமோசடி நடக்கிறதாம். இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் குவிந்தபடியே உள்ளது. இதுக்காகவே, தனியாக டெலிகிராம் குரூப்களும் செயல்பட்டு வருகின்றவாம்.. இவர்கள் சோஷியல் மீடியாவில் விளம்பரங்களும் செய்கிறார்கள்.

வெப்சைட்கள்: அதாவது, சம்பந்தப்பட்ட வெப்சைட்களில் நுழைந்ததுமே, ஒரு மெசேஜ் வருகிறதாம். அதில், பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது.. வயது வாரியாக பல பெண்களின் செல்போன் நம்பர்கள் இருக்கின்றன.. கூகுள்பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால், அந்த பெண்கின் செல்போன் நம்பர்கள் அனுப்பப்படும் என்று மர்மநபர்கள் மெசேஜ்கள் அனுப்புகிறார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிரைம் போலீசார், விசாரணை மேற்கொண்டதில், ரூ.200 முதல் ரூ.500 வரை செல்போன் நம்பர்கள் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. வயதிற்கு ஏற்றார்போல், பெண்களின் போட்டோக்களுடன், பெண்களின் செல்போன் நம்பர் விலை வைத்து விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பெண்கள் உங்களுடன் பேச ஆசைப்படுகிறார்கள் என்று சொல்லி வலையை விரிக்கிறதாம் அந்த மர்ம கும்பல்.

ஆடியோ கால்: இந்த விளம்பரத்தை பார்த்ததுமே சில ஆண்கள் விழுந்துள்ளனர்.. உடனே வீடியோ கால், ஆடியோ கால் மூலமாக பேச முற்பட்டுள்ளனர்.. அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்களை விற்பதும், அவர்கள் பேசாவிட்டால் வேறு எண்கள் தருகிறோம் இல்லாவிட்டால், அந்த பெண்களை பேச வைப்பதாக புரோக்கர் வேலை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.

அப்படி பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நம்பர், விற்பனை செய்யப்பட்ட பிறகு சில மணி நேரம் பேசுகிறார்களாம். ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ஸ்விட்ச் ஆப் ஆகி விடுகிறதாம். மீண்டும் சோஷியல் மீடியா மூலம் பெண்களின் எண்களை வாங்குவதற்கு ஆண்களை தேட துவங்குகிறதாம் இந்த மர்ம கும்பல். இந்த மோசடியில் சுய தொழில் மேற்கொள்ளும் பல பெண்கள் பாதிக்கப்படுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பியூட்டி பார்லர்: உதாரணமாக, டெய்லர் கடை, பியூட்டி பார்லர், போன்றவற்றை பெண்கள் மட்டுமே நடத்தி வருகிறார்கள்.. இவர்கள் தங்களது கடைகளுக்கு விளம்பரம் செய்ய நேரிடும்போது, அதில் தங்கள் கடையின் போன் நம்பரையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இப்படி இந்த விளம்பரத்திற்கான எழுதப்படும் செல்போன் நம்பரையும், அந்த மர்ம கும்பல் திருடி ஆன்லைனில் விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த பெண்களிடம், வாடிக்கையாளர் போல அறிமுகமாகி, நட்பாக்கி கொண்டு, பிறகு அவர்களையும் தங்கள் ஆசை வலையில் விழ வைத்து, விபச்சாரத்தில் தள்ளிவிடுகிறார்களாம். இதில் பல அப்பாவி பெண்கள் சிக்கி கொண்டுள்ளதாக தெரிகிறது. இவர்களை மீட்கும் நடவடிக்கையில்தான், கிரைம் போலீசார் களமிறங்கி உள்ளனர்.

போலீஸ் அலர்ட்: அந்தவகையில், செல்போன் எண்களை விற்பனை செய்யும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம் போன்றவற்றை ஆராய்ந்து வருகிறார்கள்.. சம்பந்தப்பட்ட மர்ம கும்பலையும் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி தகவல்களையும் கேட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், ஆண்கள் யாரும் இதுபோன்று பெண்களின் செல்போன் எண்களை வாங்கி ஏமாற வேண்டாம் என்றும், சுயதொழில் மேற்கொள்ளும் பெண்கள், அதற்காகவே பயன்படுத்தப்படும் செல்போன் நம்பர்களில் இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறும் போலீசார் ளகேட்டுக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+