பிரபல நடிகை யார்?.. இத்தனை ஆண் நண்பர்களா.. அப்பார்ட்மென்ட்டில் கதறிய பெண்.. சாட்டையை சுழட்டிய போலீஸ்

சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி வருவதாக சொல்லி ஏமாற்றிய அந்த நடிகையை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவின் மீது மக்களுக்கு எப்போதும் பெரும் மோகம் உண்டு... குறுகிய காலத்தில் ஒரே நேரத்தில் பேரும்புகழும் கிடைப்பதால் சினிமாவில் நடிக்க பலரும் ஆசைப்படுவதும் உண்டு... இதனால், நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாக சொல்லி பெண்களின் வாழ்க்கையை சூறையாடும் ஒரு கும்பல் காலகாலத்துக்கும் இருந்துகொண்டே வருவது மக்களிடம் கவலையை தந்து வருகிறது.
அந்த நபர் பெயர் சக்திவேல்.. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர். சினிமா விளம்பர நிகழ்ச்சிகளில் தானாகவே முன்வந்து, அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் போல தன்னை காட்டி கொள்வார். அதாவது "ஈவன்ட் ஏஜெண்ட்" என்று அனைவரிடமும் தன்னை பற்றி சொல்லி கொள்வார்.

சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கே முதல் நபராக ஆஜராகிவிடுவார்.. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும், அங்கு வருகை தரும் பிரபலங்களுடன் சேர்ந்து போட்டோக்களையும் எடுத்துக்கொள்வார்..

 பிரபல நடிகை

பிரபல நடிகை

அமீர்கான் முதல் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் வரை எல்லாருடனும் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யா ராய், சாய்பல்லவி, ஏஆர் ரஹ்மான், அனிருத் இப்படி ஏகப்பட்ட பிரபலங்களுடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்து கொண்டதுடன், இவர்கள் அனைவருடனும் தனக்கு நெருக்கம் என்றும் பலரிடமும் சொல்லி வந்துள்ளார்... அதேபோல, பிரபலமான இசை நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளில் 50 விஐபி பாஸ்களை எடுத்துக் கொண்டு, சினிமாவில் அவைகளை பிரபலமானவர்களுக்கு கொடுத்து, நட்புடன் பழகுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

 கவர்ச்சி வீடியோ

கவர்ச்சி வீடியோ

இவரது சோஷியல் மீடியா பக்கத்தில், இந்த பிரபலங்களின் போட்டோக்களை பார்த்த இளம்பெண்கள், இதையெல்லாம் உண்மை என்று நம்பி இவருடன் பழகி வந்துள்ளனர்.. நிறைய பேர் இதை பார்த்துவிட்டு சினிமா சான்சும் கேட்டு வந்துள்ளனர்.. அந்த பெண்களை எல்லாம், சான்ஸ் வாங்கி தருவதாக சொல்லி, பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளார் சக்திவேல்.. இப்படித்தான் பெங்களூருரை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் சென்னைக்கு வந்திருந்தார். அந்த பெண்ணுக்கும் சினிமா சான்ஸ் தருவதாக சொல்லி, ஸ்டார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் வீடியோ, போட்டோக்களை ஆபாசமாக எடுத்தாராம்.

 நீச்சல் டிரஸ்

நீச்சல் டிரஸ்

ஆனால், சினிமா சான்ஸ் எதுவும் வாங்கி தராமல் பாலியல் சேட்டையை துவங்கி உள்ளார்.. தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களுடன் பாலியல் ரீதியாக உறவு கொள்வதற்கு செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு சென்றால் 2 லட்சம் ரூபாயில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கலாம், இல்லாவிட்டால், நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டி உள்ளார் சக்திவேல். இதனால் அதிர்ந்து போன அந்த பெண் போலீசுக்கு போயுள்ளார். அப்போதுதான், சக்திவேலின் வண்டவாளங்கள் எல்லாம் தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையும் தற்போது துவங்கி உள்ளது.

 வளசரவாக்கம் புள்ளி

வளசரவாக்கம் புள்ளி

இந்த சம்பவம் நடக்கும் அதேசமயம், பக்கத்து மாநிலமான கேரளாவிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அந்த 24 வயது பெண்.. சினிமா மீது சின்ன வயதில் இருந்தே நிறைய ஆர்வம் இருந்து வந்துள்ளது.. சீரியலில் நடித்தால், அதைவைத்து சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று கணக்கு போட்டு, அதீத ஆர்வத்தினால் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறார். அப்போது, சீரியல் நடிகை ஒருவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகி இருக்கிறார்... அந்த நடிகையோ மலையாள சீரியலில் மிகவும் பிரபலமானவராம்.. நிச்சயமாக, தனக்கு தெரிந்த நபர் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். அத்துடன், தன்னுடைய ஆண் நண்பரை இளம் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறார்.

 சீரியல் நடிகை

சீரியல் நடிகை

அந்த ஆண் நண்பரும், சான்ஸ் தருவதாக சொல்லி, ஒரு நாள் திடீரென்று அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார்.. சினிமாவில் நடிக்க பெரிய வாய்ப்பு வந்திருப்பதாகவும் அது தொடர்பாக பேசவேண்டும் என்றும் சொல்லி அட்ரஸ் அனுப்பி வைத்துள்ளார்.. இந்த பெண்ணும் அந்த அட்ரஸை தேடிப்போனால், அது ஒரு அப்பார்ட்மென்ட் போல இருந்துள்ளது.. இருந்தாலும், பிளாட்டுக்குள்ளே போகாமல், அந்த பெண் பயந்துகொண்டு, சீரியல் நடிகைக்கு போனை போட்டுள்ளார்.. அதற்கு அந்த நடிகை, "தைரியாக உள்ளே போ, சான்ஸ் நிச்சயம் கிடைக்கும்" என்று சொல்லியுள்ளார்.

 அபார்ட்மென்ட்ஸ்

அபார்ட்மென்ட்ஸ்

அந்த நடிகை தந்த நம்பிக்கையால்தான், பிளாட்டுக்குள் சென்றார் இளம்பெண்.. அங்கே பார்த்தால், நான்கைந்து ஆண்கள் இருந்திருக்கிறார்கள். சினிமா பேச்சை எடுத்தவர்கள், திடீரென பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. அந்த பெண் அதிர்ந்து போய், மறுப்பு தெரிவித்துள்ளார்.. ஆனாலும் மொத்த பேரும் சேர்ந்துகொண்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்... நீண்ட நேரத்துக்கு பிறகு, அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடிவந்து, போலீசுக்கு சென்றுள்ளார் இளம்பெண்.. கூட்டுபாலியல் செய்தவர்களைவிட, தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்த அந்த சீரியல் நடிகை மீதுதான் முதல் புகாரை தந்துள்ளார் இளம்பெண்..

 கிரேட் எஸ்கேப்

கிரேட் எஸ்கேப்

இந்த புகாரின்பேரில், போலீசார் பிரபல சீரியல் நடிகை, அவரின் ஆண் நண்பர்கள் அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை தெரிந்ததும் சீரியல் நடிகை உட்பட எல்லாருமே எஸ்கேப் ஆகிவிட்டனர்.. அவர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஆண் நண்பர்களுக்கு ஒரு இளம் பெண்ணை விருந்தாக்கிய சீரியல் நடிகையின் செயல் கேரளாவில் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தி இருக்கிறது.. நாளுக்கு நாள், சினிமா மோகத்தில், வாழ்க்கையை தொலைப்பதுடன், நிழல்களை நம்பி நிஜங்களை தொலைக்கும் பரிதாபங்களும் நீண்டுவருவது நமக்குள் கவலையை தந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+