யார் இந்த ரமேஷ்? வீட்டை அடகு வைத்துத் தேர்தல் களம்.. இன்று தமிழகமே தேடும் நபராக மாறியது எப்படி?
சென்னை: அரசியல் பின்புலமோ, கோடிக்கணக்கில் பணபலமோ இல்லாத ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்து இளைஞன், தன் கடின உழைப்பால் மட்டுமே ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக உயர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ எம். ரமேஷ்.. ஊடகத்துறையில் வேலை தேடிய ஒரு இளைஞன் இன்று அதே ஊடகங்கள் முன்னிலையில் கம்பீரமாக எம்.எல்.ஏ-வாகப் பேட்டி அளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ள நிஜக் கதை நெட்டிசன்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.. யார் இவர்?
அரசியலில் ஜெயிக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் பணம் இருக்க வேண்டும் அல்லது பெரிய அரசியல் பின்னணி இருக்க வேண்டும் என்கிற பொதுவான பிம்பம் இன்று சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.

தவெக ரமேஷ்
எந்தவிதமான பின்புலமுமின்றி, வெறும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ எம். ரமேஷ்... சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், வலுவான கட்சியாக கருதப்படும் திமுக வேட்பாளரை விட 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் ரமேஷ் அபார வெற்றி பெற்றவர்..
31 வயதே ஆன இந்த இளைஞனின் வெற்றியை பற்றிதான் பலரரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த சில உரையாடல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
மைக் முன்பு கம்பீரம்
ஒரு சாதாரண இளைஞனாக அன்று மீடியாவில் வேலை தேடி அலைந்த ரமேஷ், இன்று அதே ஊடகங்களின் மைக் முன் கம்பீரமாக எம்.எல்.ஏ-வாக நின்று பேட்டி அளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றிய ரமேஷுக்கு, தவெக தலைவர் விஜய் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார்.
பெரிய அளவில் பணபலம் இல்லாததால், தேர்தல் செலவுகளுக்காகத் தனது சொந்த வீட்டை அடகு வைத்து ரமேஷ் பிரச்சாரம் செய்துள்ளார்.. அமைச்சர்கள் மற்றும் முன்னணி கட்சி வேட்பாளர்களுக்கு இடையே, ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே தங்கியிருந்து களப்பணி செய்ததை ரமேஷின் வெற்றிக்கான காரணமாகத் தொகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்..
உழைப்பால் உயர்ந்த ரமேஷ்
வாரிசு அரசியல் குறித்த விவாதங்கள் ஒருபக்கம் இருந்தாலும், உழைப்பை மட்டும் நம்பி களம் கண்ட ஒரு சாமானியருக்கு ஸ்ரீரங்கம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்ற பிறகு ரமேஷ் தனது தொகுதியில் செய்யப்போகும் முதல் கட்டப் பணிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.. ஒரு சாப்ட்வேர் என்ஜினியராக இருந்து, வேலை தேடி அலைந்து திரிந்து, மீடியாக்களுக்கு இன்று பேட்டி அளிக்கும் நிலைக்கு ரமேஷ் உயர்ந்துள்ளார்.. பணத்தை விட மக்களுடனான நேரடித் தொடர்பே இந்த வெற்றியைத் தந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.. ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் இப்போதே ரமேஷிடம் கோரிக்கைகளை அளிக்கத் தொடங்கியுள்ளனர்..!!












Click it and Unblock the Notifications