மங்கும் "காவி".. எந்த காலத்திலும் "தாமரை" மலராது.. மாதம் 50 ஆயிரம்.. லிஸ்ட்டோடு வந்த "மைதிலி வினோ"
பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மைதிலி வினோ, அக்கட்சியை குற்றஞ்சாட்டி பேட்டி தந்துள்ளார்
சென்னை: "ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டுகிறார்களே... நான் இப்போ சொல்கிறேன், தமிழகத்தில் தாமரை எந்த காலத்திலும் மலரவே மலராது" என்று தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மைதிலி வினோ ஆழ்ந்த உறுதிப்பிடிப்புடன் சொல்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜகவின் முன்னாள் மகளிரணி செயலாளராக இருந்த மைதிலி வினோ நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்தான், திமுகவில் அவர் இணைவதாக செய்திகள் வெளிவந்தன..
இதனிடையே, மைதிலி வினோவை கட்சியில் இருந்து நீக்கி தமிழக பாஜக உத்தரவிட்டது.. இந்த உத்தரவையடுத்து, பாஜக கோவை மாவட்ட தலைவர் உத்தம பாலாஜிக்கு மைதிலி வினோ ஒரு கடிதம் எழுதியிருந்தார்... அந்த கடிதத்தில் தன்னுடைய ஆதங்கங்களையும், மனக்குமுறல்களையும் கொட்டி, சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.. அதன் சுருக்கம் இதுதான்:

சுருக்கம்
"நான் 22 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்தேன்... என்னுடைய கடின உழைப்பால் மாவட்ட மகளிரணி, மாநில மகளிரணி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றினேன். சமீப காலமாக பாஜக மாவட்ட தலைமையின் நடவடிக்கை சரியில்லை. இதன் காரணமாக கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டேன். இரண்டு தினங்களுக்கு முன்பாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து திமுகவில் இணையும் முடிவை எடுத்தேன்.

களங்கம் + பாஜக
கட்சிக்கு களங்கம் விளைவித்ததாலும் என்னை கட்சியை விட்டு நீக்குவதாக அறிக்கை விட்டுள்ளீர்கள். நான் என்ன களங்கம் விளைவித்தேன்??? களங்காமல் கட்சிக்காக உழைத்து வந்ததால் இதனை கூறியுள்ளீர்களா??? பாஜக என்றால் மக்களுக்கு என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கட்சிக்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரை இணைத்து கோவையில் பாஜக வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளேன் என்பது உண்மையான பாஜகவினருக்கு நன்றாக தெரியும்.

310 + 320 கோடி
பாஜகவில் உழைப்பவருக்கு பதவி என்ற நிலை மாறி இன்று பணம் படைத்தவருக்கே பதவி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்த 310 கோடி ரூபாய் சொத்து இருப்பதால் நீங்கள் இன்று மாவட்ட தலைவர் என்றால் நாளை ஒருவர் 320 கோடி சொத்து வைத்திருந்தால் அவர் தான் அடுத்த மாவட்ட தலைவரா??? இப்படி இருந்தால் கட்சிக்காக அடிப்படையில் இருந்து உழைத்தவர்கள் கதி என்னாவது??? இங்கு தாமரை மலர வாய்ப்பில்லை. மொட்டு வந்து மலர இருந்த தாமரை தங்களை போன்ற வீண் கர்வம் பிடித்தவர்களால் வாடி கருகி போகும் என்பது தான் நிதர்சனம்" என்று மைதிலி கூறியிருந்தார்.

கருகும் தாமரை
இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு மைதிலி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், பாஜகவை சரமாரியாகவும், கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.. அவர் சொல்லும்போது, பணம் வைத்திருப்பவர்கள் கட்சிக்கு வந்தால், உடனே பதவி வழங்கப்படுகிறது, ஆனால் பல வருடமாககட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.. செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக நான் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அறிக்கை வெளியிடுகிறார்களே...

கையாடல்
ஒரு மாநில அமைச்சரை நான் சந்திக்கக்கூடாதா? அப்படி சந்தித்தால் உடனே அவர்கள் கட்சியில் சேர்கிறேன் என்று அர்த்தமா? அப்படியே இருந்தாலும், நான் செந்தில் பாலாஜியை சந்தித்த காரணத்திற்காக நீக்கப்படுகிறேன் என்றுதானே அந்த அறிக்கையில் சொல்ல வேண்டும்? கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக ஏன் சொல்கிறார்கள்? நான் என்ன கட்சிப் பணத்தை கையாடல் செய்துவிட்டு, களங்கம் ஏற்படுத்திவிட்டேனா? இதற்கு பாஜக சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும்..கட்சியின் செயல்பாடுகள் இப்போதெல்லாம் சரியில்லை என்பதால்தானே, விலகும் முடிவுக்கே வந்தேன்,..

50 ஆயிரம் செலவு
பாஜக என்ற கட்சி என்னைக்குமே ஜெயிக்காது என்று தெரிந்திருந்தும், நாங்கள் வேட்பாளராக களம் இறங்கி பணத்தை செலவு செய்திருக்கிறோம்.. எந்த எதிர்பார்ப்பில் நாங்கள் அதை எல்லாம் செய்தோம்.. கட்சியின் மீது இருக்கிற விசுவாசத்தினால் தானே செய்தோம்? பாஜகவில் மாநில பொறுப்பு பெற வேண்டுமென்றால், அவர்கள் மாதம் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.. மாவட்ட பொறுப்பு என்றால் மாதம் 20 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.. மண்டல பதவிகள் என்றால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.. அப்படி என்றால் இவர்களின் கொள்கை எங்கே போனது?

தாமரைகள்
அண்ணாமலை சார், ஒரே பாட்டில் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று கனவு காண்கிறார்.. பணம்தான் தீர்மானிக்கிறது.. ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டுகிறார்கள்... பலர் என்னைத் தொடர்பு கொண்டு சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள், நாங்கள்தான் முடிவு எடுக்க முடியாமல் தவித்து கிடக்கிறோம் என்று புலம்புகிறார்கள்.. நான் இப்போ சொல்கிறேன், தமிழகத்தில் தாமரை எந்த காலத்திலும் மலராது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் மைதிலி.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே!











Click it and Unblock the Notifications