"லெஜண்ட்".. சேலஞ்சை ஏற்று தன்னம்பிக்கையால் திருப்பியடித்த அருள்.. யார் இவர்? அசத்தல் பின்னணி!
உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் உயர்ந்துள்ளார் லெஜண்ட் சரவணன் அருளா
சென்னை: கேலியும் கிண்டலுமாய் இணையத்தில் டிரோல் செய்யப்பட்டவர், இன்று தன்னம்பிக்கையின் முழு உருவமாய் நடமாடுகிறார் என்றால், அது லெஜண்ட் சரவணா அருள் என்று சொல்ல வேண்டியதில்லை.
சினிமாவில் நடித்து புகழ்பெற்று, ஒருகட்டத்தில் வாய்ப்புகளை இழந்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர்கள், அரசியலில் கால்பதித்து விடுவது வழக்கம்..
இல்லாவிட்டால் சம்பாதித்ததை வைத்து, பிசினஸில் இறங்கிவிடுவார்கள்.. ஆனால், ஒரு தொழிலதிபராகவே உயர்ந்து, அதற்கு பிறகு சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர் லெஜண்ட் அருள்.. யார் இந்த லெஜண்ட்? என்று பலரால் தேடப்படும் நிலைக்கு உயர்ந்துள்ள இந்த அருள் யார்?
இதற்கு 50 வருடங்களுக்கு முன்பு நாம் செல்ல வேண்டி உள்ளது.. அப்போதைய, நெல்லையில் பணிக்கர் குடியிருப்பு என்ற கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்தார் சண்முகசுந்தரம் என்பவர்.. இவருக்கு நவரத்தினம், யோகரத்தினம், ராஜரத்தினம், செல்வரத்தினம் என்று 4 மகன்கள்.

வியாபாரம்
இதில் இளையவரான செல்வரத்தினத்திற்கு விவசாயம் செய்ய பிடிக்காமல், சென்னைக்கு வந்து மளிகை கடை வைத்தார்.. அந்த காலத்தில், ரங்கநாதன் தெருவில் மொத்தமே 3 கடைகள்தான் இருந்தனவாம்.. இதில் ஒரு கடையை விலைக்கு வாங்கி, சரவணா ஸ்டோர்ஸ் என்று மாற்றி 1970-ல் வியாபாரத்தை துவங்கினார் செல்வரத்தினம்.. பிறகு இவருடைய சகோதரர்கள் யோகரத்தினமும் ராஜரத்தினமும் இவருடன் இணைந்துகொள்ள, பாத்திரக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை என சரவணா ஸ்டோர்ஸ் சாம்ராஜ்யம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது.

கான்செப்ட்
ஒரே கடையில் எல்லாப் பொருட்களும் கிடைக்கும் என்ற கான்செப்டை கொண்டு வந்ததே இந்த சரவணா ஸ்டோர்ஸ்தான்.. காலங்கள் உருண்டன.. 3 சகோதரர்களின் மகன்களும் ஆளுக்கொரு கடையாக பிரித்து எடுத்துக்கொண்டார்கள்... இதில் யோகரத்தினம் என்ற சகோதரருக்கு பல்லாக்குதுரை, பொன்துரை, செல்வா அருள் துரை, சண்முகதுரை என்ற நான்கு மகன்கள்.. இதில் சரவணா அருள் தான், லெஜண்ட் சரவணாவாக இன்று மக்களால் அறியப்படுகிறார்.

நுணுக்கங்கள்
பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்தினால் மட்டுமே, இந்த இடத்துக்கு அருள் உயரவில்லை.. பிசினஸ் நுணுக்கங்களை இளமையிலேயே தெரிந்தவர்தான் அருள்.. இந்தியாவிலேயே பெரிய மல்ட்டி ஸ்டோர் கடையை கொண்டுவந்து, மக்களை திரும்பி பார்க்க வைத்தார் அருள்.. உலகிலேயே அதிகளவு தங்கநகை டிஸ்ப்ளே செய்யும் கடையை துவங்கி வைத்து அசத்தினார் அருள்.. இந்த அளவுக்கு பாடுபட்டு வளர்க்கப்பட்ட பிசினஸுக்கு, யாராவது ஒரு பெரிய நடிகரை வைத்து விளம்பரம் செய்தால், அது நன்றாக இருக்குமே என்று பல பிரபலங்களை அணுகியுள்ளார்.

ஹன்சிகா
யாரும் எந்த பதிலையும் உறுதியாக சொல்லக் காணோம்.. பேசாமல் நாமே இந்த விளம்பரங்களில் நடித்துவிட்டால் என்ன? என்று துணிந்து அவரே நடித்தார்.. தொடர்ந்து குவியும் விமர்சனங்களுக்கு நடுவே தொடர்ந்து ஹன்சிகா, தமன்னா போன்ற நடிகைகளுடன் விளம்பங்களில் நடித்தார்.. ஆனால், அந்த விளம்பரங்களால் பிசினஸ் வளர்ந்ததோ என்னவோ, அருள் குறித்த நெகட்டிவ் கமெண்ட்கள் சோஷியல் மீடியாவில் குவிந்தன..

கேஷூவல் பதில்
ஒருவரது தனிப்பட்ட உருவம் பற்றி பேசுவது அநாகரீகம் என்பதைகூட பற்றி தெரியாமல், இவரது கலர், தோற்றம், பற்றி கிண்டடித்தனர்.. வடிவேலுக்கு பிறகு, அளவுக்கு அதிகமாக டிரோல் செய்யப்பட்டது அருள் படங்களாகத்தான் இருக்கும்.. ஆனாலும், அருள் மனம் கலங்கவில்லை.. "இது என் கடை.. நான் உழைப்பால் கட்டிய கடை.. என் கடை விளம்பரத்துல நான் நடிக்குறேன்... இதில் என்ன தப்பு இருக்கு.. என்னை கிண்டல் பண்ணி என்ன ஆக போகுது?" கேஷூவலாக சொன்னதை, டக்கென உற்றுநோக்கியது இதே சோஷியல் மீடியா..

ஷாப்பிங்
விமர்சனங்களை அருள் கடந்து செல்ல காரணம், விளம்பரத்துறை மீதான நம்பிக்கையும், தன்னுடைய நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்கிற வர்த்தக வியூகமும்தான்... அவரது இந்த வியூகம் வீண் போகவில்லை.. எப்ப பார்த்தாலும் ஷாப்பிங் என்றாலே தி.நகர் என்பதை மாற்றி, சென்னையின் புறநகரான பாடி பக்கமும் மக்களை திரண்டு வர செய்தார்.. இது வளரும் இளம் தொழிலதிபர்களுக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.. சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே சங்கர் என்பதுபோல், விளம்பரங்களில் பிரம்மாண்டம் என்றால் அருள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, புதுமைகளை கொண்டு வந்தார்..

லெஜண்ட்
வெறும் வியாபாரம், பிசினஸ் இது மட்டுமே இவரது இயல்பு கிடையாது.. அருளுக்கு மறு பக்கம் உள்ளது.. அதுதான் மனித நேயம்.. கஜா புயல் பாதிப்பின்போது அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் காசோலையை வழங்கினார்... அதேபோல் தன்னுடைய சொந்த கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.. மலேசியாவில் நடந்த நடிகர் சங்க கலைநிகழ்ச்சியில், சங்க வளர்ச்சிக்காக ரூபாய் 2 கோடிக்கான காசோலை வழங்கினார்.

லெஜண்ட் சரவணா அருள்
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேலை சுவாமிக்கு காணிக்கை செலுத்தினார். இப்படி அருளின் கரிசனங்களும், உதவிகளும் நீள்கின்றன.. இப்போது லெஜெண்ட் சரவணன், தமிழ் திரைத்துறையிலும் காலடி வைத்துவிட்டார்.. எப்படி தன் கடைக்கு தான் தான் ஹீரோ என்றாரோ, அதுபோலவேதான், சினிமாவிலும் அதே தன்னம்பிக்கையுடன் ஆழமாக விதைத்து களமிறங்கி உள்ளார்.. அன்று தூற்றப்பட்ட இதே இணையதளத்தில் இன்று தன்னம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறார்.. இஉழைப்பால் உயர்ந்தவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை என்பதுதான், "லெஜண்ட்" என்ற பெயருக்கு பின்னால் உள்ள சீக்ரெட் அர்த்தம் ஆகும்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications