பூனை மீசையுடன் பையன்.. விவஸ்தைகெட்ட அந்த பெண்ணின் லூட்டி.. கொதித்த ஆணையம்.. இன்ஸ்டாகிராமுக்கு "ஆப்பு"
சென்னை: இன்ஸ்டாகிராமுக்கு எதிராகவே வழக்கு போடப்பட்டுள்ளது பரபரப்பை தந்து வருகிறது.. என்ன காரணம்?
பொதுமக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.. இதனால் முடங்கி போய் 4 சுவற்றுக்குள் கிடந்த பல எளிய மக்களின் திறமைகள் வெளிவர தொடங்கின.. பலரும் இதை பார்த்து பாராட்டுவால், இந்த திறமைசாலிகளுக்கு இதெல்லாம் ஒருவித உந்துதலையும், மகிழ்ச்சியையும், அங்கீகாரத்தையும் தந்து வருகிறது.

திறமைகள்: அதே நேரத்தில் என்னதான் திறமையின் வெளிப்பாடாக இன்ஸ்டா ரீல்ஸ்கள் இருந்தாலும் இதன் விபரீதங்கள் அதிகம் என்பதை மறுக்க முடியாது.. அதிலும் சில நேரங்களில், எல்லைமீறும் ஆபாச ரீல்ஸ்கள் , காண்போரை முகம் சுளிக்க வைக்கின்றன.
இதையாவது ஒருவிதத்தில் ஏற்கலாம்.. ஆனால், அம்மாவும், பையனும் சேர்ந்து வெளியிடும் வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருவதுடன், தாய் - மகன் உறவையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்து வருகின்றன..
பதிவுகள்: யார் இந்த அம்மாக்கள் - பையன்கள் என்ற விவரங்கள் முழுமையாக தெரியவில்லை.. "பாசத்தை காட்டும் பதிவு" என்று தலைப்பில், சேலஞ்ச் வீடியோக்கள் பதிவாகி உள்ளன.. இதில் அம்மாக்கள், தங்களது மீசை முளைக்காத மகன்களுடன் அடிக்கும் கூத்துக்களை பார்த்து இணையவாசிகளே தலையில் கை வைத்து விட்டார்களாட்ம.
இந்த இளம்தாய்கள், அரும்பு மீசை மகன்களுடன் ஓவராக ஆட்டம் ஆடுவதும், பூனை மீசை மகனுக்கு உதட்ட்டில் முத்தம் தருவதும், ஹீரோக்கள், ஹீரோயினை அலேக்காக தூக்குவார்களே, அதுபோலவே, தங்கள் அம்மாக்களை, மகன்கள் கையாள்வதும் என பார்ப்பதற்கே கண்கள் கூசுகின்றன.. இந்த சேஷ்டைகளுக்கு பின்னாடி, பாலிவுட் பாட்டுக்களையும் கேட்க முடிகிறது.
சிறுவர்கள்: பொதுவெளி என்றும் பாராமல், மீசை முளைக்காத அந்த சிறுவனின் எதிர்காலத்தையும் யோசிக்காமல், இளம் அம்மாக்கள் அடிக்கும் லூட்டிகள் தாங்கவே முடியவில்லை..
இதுபோன்ற அநாகரீக வீடியோக்கள், இளைய தலைமுறையிடமும், குழந்தைகளிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு... அதனால்தான், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்னதாகவே விழித்துக் கொண்டுவிட்டது
அதிரடிகள்: அம்மா - மகன் சம்பந்தப்பட்ட கீழ்த்தரமான செயல்களை சித்தரிக்கும் சவால் சேனல்கள் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, மிகுந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.. யூடியூப்பில் உள்ள இந்த வீடியோக்கள் தொடர்பாக, யூடியூப் நிறுவனத்தின் இந்திய அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கையின் தலைவரான மீரா சாட் ஆணையத்தின் முன்பாக நேரில் ஆஜராகுமாறும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆக இறுதியில், தாய் - மகன் உறவை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பந்தப்பட்ட "யூடியூப் இந்தியா மீது" மகாராஷ்டிர போலீஸார் வழக்கினை பதிவு செய்தார்கள்.. அத்துடன் "டிரெண்டிங் கலெக்ஷன்" என்ற பெயரில் தாய்-மகனின் கேவலமான வீடியோக்களை வெளியிட்டதற்காக, யூடியூப் நிறுவனம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...
அதுமட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.. இதுகுறித்து இன்ஸ்டாகிராம், மெட்டா போன்றவற்றுக்கு முறைப்படியும் அறிவிக்கப்பட்டுள்ளதாம். இப்படி யூடியூப் சேனல் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமுக்கு எதிராகவும் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
அரும்பு மீசை: அரும்பு மீசையே முளைத்த பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து ஆடுவதாலேயே, தங்களை வயது குறைவான பெண் என்று சில அம்மாக்கள் நினைத்து கொள்கிறார்கள் போலும்.. ஆனால், "இயற்கைக்கு" மிஞ்சினது இங்கு எதுவுமே இல்லை. அதேசமயம், யாராக இருந்தாலும், பொதுவெளி என்றுவந்துவிட்டால், "கண்ணியமும்" சற்று தேவைப்படுகிறது...!!!
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications