கருணாநிதி குட் புக்கில் இருந்தவர்.. தமிழக அரசு புது தலைமை வக்கீல் பிஎஸ் ராமன்! அந்த நடிகருக்கு உறவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழ்நாடு அரசு. இன்று மாலைக்குள் அவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மிகவும் இக்கட்டான நேரத்தில் ராஜினாமா செய்துள்ளார். பொதுவாக அரசு வழக்கறிஞர்தான் இதில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராக வேண்டும். இந்த நிலையில் தற்போது சண்முக சுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.

Who is this news Tamil Nadu Chief Advocate P S Raman? Is he a relative to a big actor?

பின்னணி: அவருக்கு பதிலாக பி எஸ் ராமன் என்ற மூத்த வழக்கறிஞர் அந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த வழக்கறிஞரான இவர் பல வழக்குகளில் ஆஜரான அனுபவம் கொண்டவர். சண்முக சுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் மூத்த வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் ஆவார். இவர் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் திமுக அரசியல்வாதியுமான வி.பி.ராமனின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகர் மோகன் வி. ராம் ஆவார்.

யார் இவர்? ராமன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்து, செப்டம்பர் 2004 இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 11 ஜூன் 2006 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்குப் பதிலாக ராமன் கூடுதல் அட்வகேட்-ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 29 ஜூலை 2009 அன்று தமிழ்நாடு வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ராஜினாமா செய்தபோது ராமன் அட்வகேட் ஜெனரலாக அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆனார்

அதன்பின் தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக பதவி ஏற்க உள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குட் புக்கில் இருந்தவர் தற்போது ஸ்டாலின் குட் புக்கில் வந்துள்ளார்.

பரிந்துரை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழ்நாடு அரசு. இன்று மாலைக்குள் அவர் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மிகவும் இக்கட்டான நேரத்தில் ராஜினாமா செய்துள்ளார். ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவரின் ராஜினாமா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்று தீவிரமாக ஆசைப்பட்டார். ஆனால் சில முக்கிய வழக்குகளில் இவர் சறுக்கிய விதம் திமுக லீகல் விங்கிற்கே இவரின் மீதான கேள்விகளை எழுப்பியது. இவரின் செயல்பாடு அத்தனை சிறப்பாக இல்லை என்று புகார்களும் சென்றுள்ளது.

ஆனால் பாரம்பரியமாக இவர் திமுகவிற்கு நெருக்கம் என்பதால் இவரை விட்டுக்கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை. இல்லையென்றால் கடந்த வருடமே இவர் மாற்றப்பட்டு இருக்க வேண்டும். சில பள்ளிக்கல்வித்துறை வழக்குகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஜாமீன் வழக்குகளில் இவரின் வாதங்கள் சரியாக இல்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. இதையடுத்தே அவர் ராஜினாமா செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+