"ஆரம்பிச்சாச்சு".. மாறி மாறி பறக்குது "துண்டு".. அண்ணாமலையின் ஸ்பீடு.. எடப்பாடி பழனிசாமியின் ஓவர்டேக்
சென்னை: தமிழக அரசியலில், எம்பி தேர்தல் வேகம் சூடுபிடிக்க துவங்கிவிட்ட நிலையில், அதிருப்தியாளர்களுக்கு வலைவீசும் படலமும் துவங்கியிருப்பதாக தெரிகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் விறுவிறுப்படைந்து வரும்நிலையில், பாஜகவை பலப்படுத்தும் பணியும்நடந்து வருவதாக தெரிகிறது.

இது தொடர்பாக நேற்றுகூட சில தகவல்கள் கசிந்தன. அதாவது, அதிமுகவுள்ளிருக்கும் ஆதரவாளர்களை, தூண்டில் போட்டு இழுக்க வேண்டும் என்று தமிழக பாஜகவில் உள்ள சில சீனியர்களுக்கு அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம்..
எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் உள்ளவர்கள் + பாஜகவிடம் நெருக்கமாக உள்ளவர்கள் + ஒற்றை தலைமையை விரும்பாதவர்கள் இப்படி பல நிர்வாகிகள் அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, "மடியில் கனம்"உள்ளவர்களும் அதிமுகவில் உள்ளதால், பாஜகவின் குறி எந்நேரமும் தங்கள் மீது விழும் என்று அவர்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்குதான், தமிழக பாஜக முதலில் தன்னுடைய தூண்டிலை வீசியிருப்பதாக சொல்கிறார்கள்.
சிக்குவார்களா?: பாஜகவில் இப்படியென்றால், அதிமுகவோ அதற்கு மேல் ஸ்பீடாக உள்ளது.. பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க அதிமுகவில் தூண்டில் போடப்பட்டுள்ளதாம்.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் தமிழக பாஜக தலைமையுடன் முரண்பட்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கியமாகி உள்ளவர்தான், இப்படி ஒரு ஆட்டத்தை துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.. தமிழக பாஜகவில் இருந்தபோது, வலிமையான பொறுப்பில் அவர் இருந்தவர் என்பதால், இப்போதுவரை கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகளுடன் அவர் தொடர்பில்தான் இருந்து வருகிறாராம். அதனால், அதிமுக பக்கம் அவர்களை கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
கொடிகம்பம்: கூட்டணி முறிவு என்று அதிமுக அறிவித்ததிலிருந்தே, பாஜகவில் சில சீனியர்கள் அப்செட்டாகி விட்டார்களாம்.. மீண்டும் அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்தால்தான், வரப்போகும் தேர்தலில் இவர்கள் போட்டியிடவே முன்வருவார்கள், இல்லாவிட்டால் வெற்றிபெறுவது கடினம் என்று நினைத்து போட்டியிடாமலேயே ஒதுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.
எனவே, சில விஷயங்களில் மாநில தலைமையுடன் உடன்படாமலும், அதிமுக குறித்து வெளிப்படையாக பேசமுடியாமலும், இருதலைக்கொள்ளியாய் மூத்த தலைவர்களில் சிலர் தவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, யாருடன் கூட்டணி என்பது தெரியாமல், நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் குழம்பி போயிருப்பதால், கட்சிக்குள்ளேயே ஒருவித சோர்வு நிழலாடுகிறதாம்..
இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. 4 நாட்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பம் நடுவது குறித்து, அண்ணாமலை அறிவித்திருந்தபோது, சில மாவட்டங்களில் பெரிதாக ஆர்வம் காட்டப்படவில்லையாம். இதனால்தான், மாநில அளவில் மிகப்பெரிய அளவுக்கு பேசப்பட்டிருக்க வேண்டிய கொடிகம்பம் விவகாரம், அப்படியே அமுங்கிப்போய்விட்டதாகவும் சொல்கிறார்கள்.
கட்சி தாவல்: இப்படியெல்லாம் நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்து கொண்டிருக்குபோது, பாஜகவிலிருந்து, அதிமுகவுக்கு யார் தாவினாலும், அது அண்ணாமலைக்கு பெருத்த சிக்கலை தந்துவிடும்.. அதேபோல, அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு யார் தாவினாலும், அது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்..பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications