Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரம் விஏஓ ஆபீசில் நுழைந்த சங்கீதா.. அங்கே அந்த சம்பவம்.. யார் அந்த ஆபீஸர்? மனசாட்சியே இல்லையா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறப்பு சான்றிதழ் மூலமாக, இறந்தவரின் வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள், இறந்தவரின் உடைமைகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.. இப்படியான இறப்பு சான்றிதழை, சிரமமே இல்லாமல், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்.

Who is this Vizhupuram Woman and why did she give Complaint against Villupuram VAO Office

சொத்து வாரிசு: இறப்பு பதிவு என்பது நபரின் இறப்பு நேரத்தையும் தேதியையும் நிரூபிப்பதாகும்.. சமூக, சட்ட மற்றும் உத்தியோகபூர்வ பொறுப்புகளிலிருந்து தனிநபரை விடுவிப்பதாகும்.. சொத்து வாரிசை தீர்ப்பதுடன், குடும்பம் காப்பீடு மற்றும் பிற நன்மைகளை சேகரிக்கவும் இந்த சான்றிதழ் உதவுகிறது. எனவேதான், அனைத்து இறப்புகளும் நிகழ்ந்த இடத்தில் 21 நாட்களுக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

பொதுமக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும். அந்தவகையில், ஆன்லைனிலேயே, பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்களை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.. எந்தவித செலவும் இல்லாமல், நாமே இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

சான்றிதழ்கள்: இப்படி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் 2 வகையான வழிமுறைகள் உள்ளன.. சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற வெப்சைட் மூலமாகவும், பிற பகுதிகளில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற வெப்சைட் மூலமாகவும் சான்றிதழை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

இப்படி ஆன்லைனில் சான்றிதழை பெற வசதிகள் இருந்தாலும், டவுன் பஞ்சாயத்தில் பதிவு செய்தும் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.. ஆனால், இந்த சான்றிதழை தருவதற்கு லஞ்சம் கேட்டுள்ளார் ஒரு அதிகாரி.. அதுகுறித்த சம்பவம்தான், விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்டது நல்லாபாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சங்கீதா.. இவர் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்... கணவர் பெயர் ஐய்யனார்.. ஆனால், இவர் கடந்த 2014ம் ஆண்டு உடம்பு சரியில்லாமல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு 11 வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளான்.

இறப்பு சான்றிதழ்: இந்நிலையில், சங்கீதா தன்னுடைய கணவரின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக, விஏஓ ஆபீசுக்குள் சென்றிருக்கிறார்.. அங்கே கிராம நிர்வாக அலுவலர், ஆரோக்கியதாஸ் என்பவரிடம் மனு தந்துள்ளார். ஆனால், இறப்பு சான்றுக்கு 5,000 ரூபாய் வேண்டும் என்று ஆரோக்கியதாஸ் கேட்டாராம். இதைக்கேட்டு அதிர்ந்த சங்கீதா, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, 1000 ரூபாய் மட்டும் வைத்திருக்கிறேன் என்று சொல்லி, அந்த ஆயிரம் ரூபாய் பணத்தை தந்திருக்கிறார்.

அந்த பணத்தையும் வாங்கி கொண்டாராம் ஆரோக்கியதாஸ்.. பிறகு, சங்கீதாவிடம் செல்போன் நம்பர் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். அன்றைய நாளிலிருந்து தினமும், ஆரோக்கியதாஸிடமிருந்து நைட் நேரத்தில் போன் வந்துள்ளது.. இரவு நேரமானாலே, சங்கீதாவிற்கு போனை போட்டு, ஆபாசமாக பேச ஆரம்பித்துவிடுவாராம்..

லஞ்ச பணம்: லஞ்ச பணம் தராததால்தான், இப்படியெல்லாம் டார்ச்சர் செய்கிறார் என்று நினைத்து, மேலும் 3,000 ரூபாயை தந்துள்ளார் சங்கீதா.. அதற்கு பிறகுதான், சங்கீதாவிற்கு இறப்பு சான்றிதழ் தந்தாராம் ஆரோக்கியதாஸ்.

சான்றிதழை பெற்ற பிறகு, மகளிர் உதவித்தொகைக்காக, சங்கீதா விண்ணப்பித்திருக்கிறார்.. சங்கீதாவின் விண்ணப்பத்தை பார்த்ததுமே, விஏஓ ஆரோக்கியதாஸ், அதை ரத்து செய்துவிட்டாராம். இதுகுறித்து சங்கீதா நேரடியாகவே அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு ஆரோக்கியதாஸ், தன்னுடைய பாலியல் இச்சைக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.

சூர்யாவுக்கு மிரட்டல்: இதனால் என்ன செய்வதென்றே தெரியாத சங்கீதா, தன்னுடைய அண்ணன் சூர்யாவிடம் இதை பற்றி சொல்லி அழுதுளார்.. உடனே இதைக்கேட்டு அதிர்ந்த சூர்யா, விஏஓவிடம் சென்று நடந்தது குறித்து விசாரித்துள்ளார். அதற்கு சூரியாவையும் ஆரோக்கியதாஸ் மிரட்டினாராம்.

Who is this Vizhupuram Woman and why did she give Complaint against Villupuram VAO Office

இவ்வளவும் நடந்த பிறகுதான், பாதிக்கப்பட்ட சங்கீதா, தன்னுடைய உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோருடன், விழுப்புரம் எஸ்பி ஆபீசுக்கு கிளம்பி சென்றார்.. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இதுகுறித்து புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இதனிடையே, சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை குறித்த ஆரோக்கியதாஸின் ஆடியோ இணையத்தில் வெளியாகிவிட்டது. இதைக்கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்..!!

அதிர்ச்சி: பல்வேறு நிதி சிக்கல்களுக்கிடையில், மகளிரின் நன்மைக்காகவே நம்முடைய தமிழக அரசு இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகையை தந்து வருகிறது.. இந்த உரிமைத்தொகை பெறுவதற்கும், இருளர் பெண்ணுக்கு இப்படியொரு துயரமா??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+