நிச்சயம் ஆகி 4 வருடம் ஆகியும்.. நடக்காத விஜயகாந்த் மகன் திருமணம்.. பின்னணியில் மோடியும் ஒரு காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிச்சயதார்த்தம் ஆகி 4 வருடம் ஆகியும் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிகளின் மகன் விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

தமிழ்நாட்டு அரசியல் உலகையும், சினிமா உலகையும் அதிர வைக்கும் விதமாக.. தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை காலமானார். மொத்த தமிழ்நாடும் இவரின் மரணம் காரணமாக அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

Who is Vijayakanths daughter-in-law? Who are the wife Vijay Prabhakar and Shanmuga Pandian?

சிலரைத்தான் அரசியல் கடந்து, சினிமா கடந்து மக்கள் எல்லோரும் பொதுவாக விரும்புவது உண்டு. இவரின் மரணத்திற்கும் அப்படிதான் தற்போது தமிழ்நாடே கண்ணீர்விட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பலியானார்.

நிச்சயம்: இந்த நிலையில் விஜயகாந்த் மரணத்தை தொடர்ந்து பலரும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தேட தொடங்கி உள்ளனர். அவரின் இறுதி அஞ்சலியில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் உள்ளனர் என்று பலரும் தேடி வருகின்றனர். முக்கியமாக விஜயகாந்தின் மருமகள்கள் எங்கே என்று தேடி வருகின்றனர்.

நிச்சயதார்த்தம் ஆகி 4 வருடம் ஆகியும் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிகளின் மகன் விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

Who is Vijayakanths daughter-in-law? Who are the wife Vijay Prabhakar and Shanmuga Pandian?

கடந்த 2019ஆம் ஆண்டு விஜய பிரபாகரனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன். இந்த நிலையில் விஜயகாந்த் உடல் நிலை காரணமாகவே திருமணம் நடைபெறுவது தள்ளிப்போனது.

திருமணம் ஏன் நடக்கவில்லை: பிரதமர் மோடி தலைமையில் தனது மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பி இருக்கிறார் விஜயகாந்த். இதனால் பிரதமர் மோடியிடம் தேதி கேட்பதற்கான நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்று வந்தது. மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் மோடியின் நேரம் கிடைக்கவில்லை.

ஒரு பக்கம் மோடி நேரம் கிடைக்கவில்லை, இன்னொரு பக்கம் விஜயகாந்த் உடல்நிலை மோசமடைந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த நிச்சயதார்த்தம் அப்படியே உள்ளது. இவர்களுக்கு இடையில் இன்னும் திருமணம் நடக்கவில்லை.

இன்னொரு பக்கம் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கும் திருமணம் நடக்கவில்லை. அவர் வெளிநாட்டு பெண் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அண்ணனுக்கு திருமணம் ஆன பின்பே தம்பிக்கு திருமணம் ஆகும் தகவல்கள் வருகின்றன.

மரணம் பின்னணி; நேற்று விஜயகாந்திற்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மரணத்தின் பின் அது பாசிட்டிவ் ஆக இல்லை. இதனால் அவரின் மரணத்திற்கு கொரோனா காரணம் என்று கூற முடியாது. மரணத்திற்கு பின் செய்யப்பட்ட சோதனையில் அவர் கொரோனா பாசிட்டிவ் இல்லை.

Who is Vijayakanths daughter-in-law? Who are the wife Vijay Prabhakar and Shanmuga Pandian?

விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் நுரையீரல் அழற்சி தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு சுத்தமாக மூச்சு விடும் திறன் இல்லாமல் போய் உள்ளது. கொரோனா + நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு + நுரையீரல் அழற்சி மூன்றும் சேர்ந்துதான் அவரின் உடல்நிலையை மோசமாக்கி உள்ளது.

இந்த நிலையில் மரணத்திற்கு பின் கொரோனா பாசிட்டிவ் இல்லை என்பதால்.. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+