யாரு.. ஜோசப் விஜய்யா.. தமிழ்நாட்டு ரிசல்ட்டை கேள்விப் பட்டதும் ஒரு நொடி ஸ்டன் ஆன சித்தராமையா
சென்னை: கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்தில் விஜய்யின் வெற்றி வியப்பை தருவதாகவும், அவரது முழு பெயர் ஜோசப் விஜய்யா என்றும் ஆச்சர்யத்துடன் பதில் அளித்துள்ளார். இதேபோன்று மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது எதிர்பார்க்காதது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் வியப்பை கொடுப்பதாக அமைந்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த இரு பெரும் திராவிட சக்திகளை வீழ்த்தி தனிப்பெரும் கட்சியாக விஜய் வென்றுள்ளார்.

விஜய்யின் தவெக தனித்தே போட்டியிட்ட நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய் ஆதரவு கேட்டு இருப்பதாக தெரிகிறது. தேர்தல் ரிசல்ட் வெளியான நாளில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்தில் விஜய்யின் வெற்றி வியப்பை தருவதாகவும், அவரது முழு பெயர் ஜோசப் விஜய்யா என்றும் ஆச்சர்யத்துடன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தோற்றுப்போனதை ஆச்சரியமாக பார்க்கின்றேன்.. ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது என்று பார்க்கிறேன்.. நான் மேற்கு வங்கத்தை சொல்லவில்லை.. பொதுவாக ஒரு ஆட்சிக்கு எதிரான ஒரு மனநிலை இருந்து இருக்கிறது.. மேலும் எஸ்.ஐ.ஆர் மூலம் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது எல்லாம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் சில காரணங்களும் இருக்கலாம்.. அது என்ன என்று தெரியவில்லை.
ஆனால் தமிழ்நாட்டை நினைத்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. தேர்தலில் எதுவென்றாலும் நடக்கலாம் என்பதை காட்டியுள்ளது. இளைஞர்கள் தான் அதிகம் விஜய்க்கு வாக்களித்து உள்ளனர். அவரது பெயர் என்ன.. முழு பெயர் என்ன?.. ஜோசப் விஜய்.. (சந்திரசேகர் மகன் என அங்கிருந்தவர்கள் தெரித்தனர்) ஓ.. சந்திரசேகர் பையனா.. அதனால் தான் ஆச்சரியமாக பார்க்கிறேன்.
ஜோசப் விஜய் என்பது தெரியும்.. ஆனால் அவர் சந்திரசேகர் பையன் என இப்போது தான் தெரிகிறது.." என்று கூறினார். அப்போது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவு பற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, "அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது.
புதிய ஆட்சி வர வேண்டும் என அவர்கள் வாக்களித்துள்ளனர். அதனால் தான் இதனை ஆச்சரியமான முடிவு என்று சொல்கிறோம். கேரளாவை பொறுத்தவரை இதை எதிர்ப்பார்த்தோம்.. இதைவிட அதிகமாக கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications