வாடகைக்கு விட்டது யாருங்க?.. அண்ணா நூலகத்தை இப்படியா பயன்படுத்துவீர்கள்: சட்டசபையில் முதல்வர் கோபம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. முந்தைய ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் மோசமான நிலையை அடைந்துவிட்டதாக செங்கம் தொகுதி திமுக உறுப்பினர் கிரி இன்று அவையில் குற்றச்சாட்டு வைத்ததால் பெரிய விவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடநாடு விவகாரம் உச்சத்தில் இருப்பதால் தினமும் இது தொடர்பாக அவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கோடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் திமுகவினர் பேச கூடாது என்று எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக கோடநாடு விசாரணைக்கு எதிர்ப்பு அதிமுக அவையை புறக்கணித்த நிலையில் இன்றும் கோடநாடு விசாரணை தொடர்பாக அவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மத்தியில்தான் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்பான முக்கியமான விவாதமும் நடைபெற்றது.

நூற்றாண்டு நூலகம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கவில்லை என்று திமுக தொடக்கத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். உள்ளே நூலகம் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது, சுவர்கள் மோசமான நிலையில் உள்ளது, இந்த நூலகத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும், இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இன்று பேச்சு
அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்து இன்று சட்டசபையில் செங்கம் தொகுதி திமுக உறுப்பினர் கிரி கடுமையான கேள்விகளை வைத்தார். கடந்த ஆட்சியில் இந்த நூலகம் சரியாக பராமரிக்கப்படவில்லை. நூலகத்தை வேண்டும் என்றே கைவிட்டுவிட்டனர். இதனால் தற்போது மக்கள் பெரிய அளவில் பயன்படுத்தாமல் அந்த நூலகம் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த நூலகத்தை உடனடியாக புதுப்பித்து மக்கள் பலர் இதை பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பதில்
இதையடுத்து அதிமுக மூத்த உறுப்பினர் எம்எல்ஏ செங்கோட்டையன் எழுந்து நின்று இதற்கு பதில் அளித்தார். முந்தைய ஆட்சியில் அண்ணா நூலகம் நன்றாக பராமரிக்கப்பட்டது. நூலகம் நல்ல நிலையில்தான் இருந்தது. அண்ணா நூலகத்தை நாங்கள் ஒன்றும் வீணடிக்கவில்லை என்று செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து பேசினார். செங்கோட்டையன் பேசிக்கொண்டு இருக்கும்போதே எழுந்து நின்ற முதல்வர் ஸ்டாலின், அவரின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

மறுப்பு
முதல்வர் ஸ்டாலின் தனது பதிலில், முந்தைய ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பாழடிக்கப்பட்டது உண்மைதான். இதில் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்த நூலகம் எப்படி பாழடிக்கப்பட்டது என்றும் பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வாடகைக்கு விட்டது யார்? திருமணத்திற்கு நூலகத்தை வாடகைக்கு விட்டு அதை பாழடித்தனர் . இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று, அதன்பின் நீதிமன்றம் கொடுத்த உத்தரவால் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் காக்கப்பட்டது.

திமுக
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நூலகத்தை பயன்படுத்த கூடாது என்று, நீதிமன்றம் கொடுத்த உத்தரவால் இந்த நூலகம் பாதுகாக்கப்பட்டது. தற்போது திமுக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. நூலகத்தை புதுப்பித்து மீண்டும் மீட்டு எடுக்கும் பணியில் திமுக அரசு ஈடுப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
-
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்! -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications