நாம யாருக்கு வாக்கு அளிப்பது? எடப்பாடியை நெருக்கும் லோக்கல் புள்ளிகள்.. அஸ்திரத்தை எடுக்கும் அதிமுக?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் நாம் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் ; நம் ஓட்டின் நிலைப்பாடு என்ன? என்று எடப்பாடியிடம் கேட்டிருந்தார்கள். விரைவில் அது பற்றி அறிவுறுத்தப்படும் என கட்சி தலைமையிடமிருந்து சொல்லப்பட்டது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் நம் வாக்குகள் யாருக்கு ? என்று ஒரு ஆலோசனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனியர்களிடமும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளிடமும் நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, ''தேர்தலை நாம் புறக்கணித்தாலும், ஓட்டுப் போடாமல் புறக்கணியுங்கள் என்று நாம் சொல்லக்கூடாது.

ஓட்டுப் போடாமல் இருப்பது தேர்தல் அரசியலை நாமே மதிக்காதது போலாகி விடும். அதனால் யாருக்கு ஓட்டு என்பதை முடிவு செய்ய வேண்டும்'' என்று சிலர் வலியுறுத்தினர். வேறு சிலரோ, ''நாம் ஓட்டுப்போடவில்லை எனில் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும். வாக்குப் பதிவு குறைவாக இருந்தால் அதுவே ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டும். இல்லையெனில், ஓட்டு போட்டுத் தான் ஆக வேண்டுமெனில் சீமானை ஆதரிக்கலாம்.
சீமான் கட்சிக்கு விழும் அதிகப்படியான வாக்குகள் திமுகவுக்கு எதிரானது என்பதை உணர்த்தும். இதே உணர்வை பாஜக, தேமுதிக, விஜய் ரசிகர்கள் என அவர்களும் எடுத்தால் திமுகவுக்கு எதிரான வாக்குகளின் பலம் ஒரே இடத்தில் குவியும். இது ஆளும் கட்சிக்கு விழுந்த அடியாக தோன்றும். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல சீமானை ஆதரிக்கலாம்'' என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சீனியர்களோ, ''அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு கிடைத்தது என சீமான் சொல்லமாட்டார்.
மாறாக, திமுகவுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான். அதற்காகத்தான் மக்கள் எங்களை அமோகமாக ஆதரித்துள்ளனர் என்று பரப்புரை செய்வார். எதிர்காலத்தில் இது நமக்கே எதிராகக்கூட திரும்பும். இது நமக்குத் தேவையா? அதனால், சீமானை ஆதரித்து வாக்களிக்கக்கூடாது. ஓட்டுப் போட வேண்டும் என முடிவு எடுத்து விட்டால், யாரையும் ஆதரிக்க வேண்டாம்; நோட்டாவுக்கு போடுவோம். திமுக வாங்கும் ஓட்டுகளில் பாதி அளவு நோட்டாவுக்கு விழுந்தாலே அது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்.
நம்மளை போல பாஜக, தேமுதிக, விஜய் கட்சி ஆகியைவும் நோட்டாவுக்கு வாக்களித்தால் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை அரசியல் ரீதியாக ஏற்படுத்தும்'' என்று சொல்லியிருக்கிறார்கள். இது, நல்ல யோசனை என்று அனைவரும் ஒத்துக்கொள்ள எடப்பாடியும் அந்த முடிவுக்கு வந்துள்ளார். விரைவில் இது குறித்து முறையாக அறிவுறுத்தப்படும் என்று கூறுகின்றனர் அதிமுகவினர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகளை நோட்டா பக்கம் கொண்டு செல்ல உள்ளூர் தலைகள் முயன்று வருகிறார்களாம். அதிமுகவின் பவரை காட்ட இதுவே சரியான வழி என்று உள்ளூர் அதிமுக தலைகள் பலர் கருதுகிறார்களாம்.
இதனால் தீவிர அதிமுகவினர் நோட்டாவிற்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனராம். வார்டு அளவில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து.. அதிமுக இல்லாத இடத்தில் வேறு கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். நோட்டாவிற்கு வாக்களியுங்கள். அப்போதுதான் நம்முடைய பவர் தெரியும் என்று பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றன. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும். காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications