Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எடப்பாடியை நெருங்கியாச்சு".. கிளம்பி வரும் பூதம்.. ஏற்கனவே பாஜகவின் ஷாக்.. இப்ப திமுகவின் அதிரடி

அதிமுகவில் குட்கா விசாரணையில் பலர் சிக்குவார்கள் என்று திமுக அமைச்சர் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி டீமுக்கு நெருக்கடி கூடி வருவதாக கூறப்படுகிறது.. அதற்கேற்றார்போல், வழக்கு விசாரணைகள் சூடுபிடிக்கப் போவதாக திமுக தரப்பில் உறுதிபட கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், தங்கமணி ஆகிய 6 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்..
அந்த சோதனைகளில், கணக்கில் வராத கோடிக்கணக்கில் ரூபாய் பணம் மற்றும் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது... அதாவது, இதுவரை 6 மாஜிக்களிடம் சோதனை நடந்து முடிந்துள்ளது..

 7 + 6

7 + 6

இந்த 6 பேரும், மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது நடந்து முடிந்த ரெயிடுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இன்னும் மாஜி அமைச்சர் காமராஜ் கணக்கு இதில் சேரவில்லை. இந்த 7 பேருமே அமைச்சரவை வரிசையில் பிரதான இடத்தை பிடித்தவர்.. அதேபோல, இதில், டாப்பில் உள்ள 2 பேரிடம் மட்டும், திமுக இன்னும் நேரடியாக நெருங்கவில்லை.. ஆனால், அவர்களுக்கு பதிலாக, அவர்களின் ஆதரவாளர்கள், உதவியாளர்கள், "வலதுகரங்களை, டார்கெட் செய்து வருகிறது..

லீடர்கள்

லீடர்கள்

இப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.. இந்த பிளவை பாஜக மேலிடம் சரிசெய்யவில்லை... எனவே, பாஜகவும், திமுகவும் சேர்ந்து தம்மை பழிவாங்குவதாக எடப்பாடிடீம் சந்தேகித்து வருகிறது.. அதற்கேற்றார் போல், குட்கா வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது திமுக.. அதிமுகவினர் பலர் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த வழக்குகளை திமுக அரசு, சிபிசிஐடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி வி.ரமணா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி. கே. ராஜேந்திரன், சார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்தது. மாநில அரசிடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்ய முடியும்.

லெட்டர்

லெட்டர்

அதனால் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு சிபிஐ கடிதம் எழுதி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கஞ்சா, குட்கா கடத்தல் வழக்குகளில் அதிமுகவினர் பலர் சிக்குவார்கள் என்று இப்போது எடப்பாடி டீமுக்கு குண்டை தூக்கி போட்டுள்ளார்.. காட்பாடியில் துரைமுருகன் பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சி கால அரசை கடுமையாக விமர்சித்தார்.

 சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

மேலும், "கஞ்சா- குட்கா அதிக அளவு கடத்தப்பட்ட அதிமுக ஆட்சியில் அது குறித்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. அதிமுகவினர் பலர் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த வழக்குகளை திமுக அரசு, சிபிசிஐடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வழக்கில் அதிமுகவினர் பலர் சிக்குவார்கள்" என்று கூறியுள்ளார்.. அதுமட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு கொலை, கொள்ளையில், அவர் ஏன் யாரையும் அப்போது கைது செய்யவில்லை.. விஷயம் எல்லாருக்கும் தெரியும்.. என்று கூறியுள்ளதும் எடப்பாடிக்கு தலைவலியை உண்டு பண்ணியுள்ளது..

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இதனிடையே, ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம் சொல்லும்போது, "கொடநாடு வழக்கு விசாரணை தொடர்பாக மூன்று மாதங்கள் வரை காத்திருப்போம். சரியான முடிவுகள் வரவில்லை என்றால் நாங்களே இந்த விசாரணையை கையில் எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். அதிமுக பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும், வழக்கு, விசாரணைகளில் இருந்து தங்களை காத்துக் கொள்கிற நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+