சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ரெட்டி" மாதிரி இருப்பாரா.. புது ஆளுநர் எப்போ, எங்கிருந்து வருவார்.. "திரில்" எதிர்பார்ப்பில் திமுக

அடுத்த ஆளுநர் நியமனம் எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆளுநர் நியமனம் எப்போது? பாஜக என்னதான் பிளானில் உள்ளது? என்ற ஒருவித எதிர்பார்ப்பு பரவலாக எழுந்து வருகிறது.

தற்போதைய ஆளுநரின் பதவிக்காலம் முடிய போகிறது.. இதனால் அடுத்த ஆளுநர் யார் என்ற பேச்சும் கடந்த சில தினங்களாக வலுவாகி கொண்டிருக்கிறது.

யூகங்களாகவே சிலரது பெயர்கள் அடிபட்டு வருவதால், உறுதியான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.. அப்படியானால் மத்திய பாஜக என்ன திட்டத்தில் உள்ளது? எப்போது ஆளுநரை நியமிக்க போகிறது? என்றும் தெரியவில்லை.

ஆடி பிறந்தாச்சு...என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு ஜனகராஜ் மாதிரி சந்தோஷப்படுறீங்களா ஆண்களே ஆடி பிறந்தாச்சு...என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு ஜனகராஜ் மாதிரி சந்தோஷப்படுறீங்களா ஆண்களே

டெல்லி

டெல்லி

ஆனால், இப்போதைக்கு ஆளுநரை நியமிக்கும் முடிவில் டெல்லி இல்லை என்கிறார்கள்.. காரணம் பாஜகவுக்கு ஆதரவான சூழல் இன்னும் ஏற்படவில்லையாம்.. அதாவது, 4 சீட் வெற்றி பெற்றதுமே தங்கள் பலம் கூடிவிட்டதாகவே நினைத்து சில அதிரடிகளை கையில் எடுத்து பாஜக.. குறிப்பாக, உணர்வுப்பூர்வமான விவகாரங்களையே குறி வைத்து அதில் கையும் வைத்தது..

 எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

அதில் ஒன்றுதான் ஒன்றியம்.. இப்போது வரை ஒன்றியம் என்ற வார்த்தையைதான் திமுக அரசு பயன்படுத்தி வருகிறது.. இதற்கு எத்தனையோ விதமான எதிர்ப்புகளை பதிவிட்டும், திமுக தன் தரப்பில் உறுதியாக உள்ளது.. இது டெல்லிக்கு நெருக்கடியை தந்துள்ளதாகவே கருதப்படுகிறது.. இதைதவிர ஜெய்ஹிந்த் விவகாரமாகட்டும் நீட் தேர்வு விவகாரமாகட்டும், 7 பேர் விடுதலை விவகாரமாகட்டும், புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்பாகட்டும் இவை அனைத்திலுமே பாஜகவின் பிளான்கள் தவிடு பொடியாகி கொண்டிருக்கின்றன.

 கொங்கு நாடு

கொங்கு நாடு

கொங்கு நாடு விவகாரமாவது தங்களுக்கு கைகொடுக்கும் என்று பாஜக கணக்கு போட்டது.. ஆனால், அதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று முருகன் சொல்லிவிட்டதால், இந்த விவகாரமும் சோடை போய்விட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், உடனடியாக ஆளுநரை நியமிக்க முடியாமல் பாஜக உள்ளது.. அதுமட்டுமல்ல, மேற்கண்ட மொத்த விவகாரத்துக்கும் சேர்த்து திமுகவுக்கு செக் வைக்கும்படியான ஒரு ஆளுமையை ஆளுநராக நியமிக்கவும் பாஜக மேலிடம் யோசித்து வருகிறதாம்.

தமிழகம்

தமிழகம்

இந்த நியமனத்தில் ரவிசங்கர் பிரசாத் பெயரும் அடிபட்டது.. ஆனால், இன்னும் அது உறுதியாகவில்லை.. இப்போது வேறு ஒரு மாநிலத்திலிருந்து ஆளுநர் வரலாம் என்று பேச்சு அடிபடுகிறது. தமிழகத்தில் திமுக வலுவாக காலூன்றி விட்டதாலும், அரசு மீது எந்த அதிருப்தியும் மக்களிடையே இல்லை என்பதாலும், குற்றம் குறைகள் கண்டுபிடித்துச் சொல்லப்பட்டாலும் அதை உடனே திமுக தீர்த்து விடுகிறது என்பதாலும் வலுவான ஆளுநரை போட வேண்டும் என்று பாஜக தீவிரமாக யோசித்து வருகிறதாம்.

 காங்கிரஸ்

காங்கிரஸ்

தமிழகத்தில் ஜெயலலிதா வலுவான நிலையில் இருந்தபோதுதான் அவருக்கு செக் வைக்க அப்போது சென்னாரெட்டியை ஆளுநராக்கியது அன்றைய காங்கிரஸ் அரசு. இருவருக்கும் முட்டல் மோதல் நடக்காத நாளே கிடையாது. அந்த மாதிரியான ஆளுநர் வருவாரா அல்லது அனுசரித்துப் போகும் ஆளுநர் வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Who will be the Next TN Governor and Whats BJPs Plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X