நிதிஷ் + ஸ்டாலின் + மம்தா.. பிரதமர் பதவியை விடுங்க.. "அந்த" பதவிக்கு அச்சாரம் போடும் தலைகள்.. ஆஹா
சென்னை: எதிர்க்கட்சி கூட்டணிகள் நெருக்கம் ஆகி வரும் நிலையில் இப்போதே அதில் துணை பிரதமர் பதவிக்கு அடிபோட டாப் தலைவர்கள் சிலர் முயன்று வருகிறார்களாம்.
லோக்சபா தேர்தல் பெரும்பாலும் வரும் மே மாதம் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றாக எதிர்கொள்ள இருக்கின்றன. பாஜக தொடர்ந்து வலிமை அடைந்து கொண்டே இருக்கும் நிலையில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்றாக கைகோர்த்து வருகின்றன.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
26 கட்சிகள் மோடிக்கு எதிராக ஒன்று கூடி உள்ளனர். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. சமீபத்தில் நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
முதல் கூட்டம் பீகார்.. இரண்டாம் கட்ட கூட்டம் பெங்களூரில் நடந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் மும்பையில் நடக்க உள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. பாஜகவிற்கு இது கடும் அழுத்தத்தை கொடுத்து உள்ளது.
கூட்டணி எப்படி?: எதிர்க்கட்சி கூட்டணிகள் நெருக்கம் ஆகி வரும் நிலையில் இப்போதே அதில் துணை பிரதமர் பதவிக்கு அடிபோட டாப் தலைவர்கள் சிலர் முயன்று வருகிறார்களாம். அதன்படி ஒருவேளை லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் நிதிஷ் குமார் பிரதமர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
ஏனென்றால் பிரதமர் பதவியில் ஆசை இல்லை என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஏற்கனவே நிதிஷ் குமாருக்கு பிரதமர் ஆசை இருப்பதாக தேசிய அரசியல் பேச்சு உள்ளது. நிதிஷ் குமார் பிரதமர் ஆகும் பட்சத்தில் பீகார் முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்கும் வாய்ப்புகள் உள்ளன. பிரதமர் பதவிக்கு ஒரு பக்கம் போட்டி உள்ள நிலையில் இப்போதே துணை பிரதமர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன.
அதன்படி மாநில அளவில் எதிர்க்கட்சியாக இருக்கும் சில மாநில தலைவர்கள் துணை பிரதமர் பதவிக்கு அடிபோட்டு வருவதாக கூறப்படுகிறது. துணை பிரதமர் பதவி என்பதற்கு பெரிதாக அதிகாரப்பூர்வ பவர் எதுவும் இல்லை.
ஆனாலும் தேசிய அரசியலில் இது இமேஜை உயர்த்தும், எதிர்காலத்தில் பிரதமர் ஆகும் வாய்ப்புகள் வரும் என்பதால் இப்போதே சில மாநில தலைவர்கள் துணை பிரதமர் பதவிக்கு அச்சாரம் போட முயன்று வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக மாநில அளவில் எதிர்க்கட்சியாக இருக்கும் சில மாநில தலைவர்கள்தான் இந்த துணை பிரதமர் பதவிக்கு பிளான் போடுவதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications