அப்படியே மாறுதே.. சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவர்தானா?அப்போ அந்த வெளிநாட்டு வீரர்? தோனி பிளான்?
சென்னை: தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக பேச்சுக்கள் சுற்றி வரும் நிலையில்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் எழுந்துள்ளன.
2023 ஐபிஎல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
2023 ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வந்த சிஎஸ்கே அணி தற்போது தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது.
2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 4ம் இடத்தில உள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இனி மீதம் உள்ள 4 போட்டிகளில் 3ல் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும்.
தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அவரை வெற்றியோடு அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் :இந்த நிலையில்தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக பேச்சுக்கள் சுற்றி வரும் நிலையில்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் எழுந்துள்ளன.
அதன்படி சிஎஸ்கே அணியிடம் சில திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணிக்கு நீண்ட கால கேப்டன் இருக்கும் விதமாக இளம் வீரரை கேப்டனாக கொண்டு வர திட்டங்கள் இருக்கிறதாம்.
முதலில் சிஎஸ்கே அணிக்குள் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் என்ற திட்டத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட்டார். அவரை எதிர்கால கேப்டனாக்கும் திட்டங்கள் இருந்தன. ஆனால் அவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.
இந்த சீசனில் கூட 2 போட்டிகளில்தான் ஆடினார். அவர் பார்மிலும் இல்லை. இன்னும் சிஎஸ்கே செட்டப்பில் முழுமையாக அவர் பொருந்தவில்லை. அதோடு அவருக்கு வயதும் இல்லை.

சிஎஸ்கே கேப்டன் ஆனாலும் கூட அவர் நீண்ட காலம் கேப்டன்சி செய்ய முடியாது. அதோடு அவர் ஐபிஎல்லை விட இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் நபர் என்பதால்.. அடுத்த சீசன்களில் உறுதியாக ஆடுவார் என்பதெல்லாம் சந்தேகம்தான்.
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க பயிற்சி வழங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் தோனி அணியில் இருப்பார். கேப்டனாக இல்லாமல் ஆலோசகராக ருத்திராஜுக்கு ஆலோசனை வழங்குவார்.
ஜடேஜாவை வைத்து செய்யப்பட்ட கேப்டன்சி முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அவர் கேப்டனாக நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் ஜடேஜா மீண்டும் கேப்டனாகாத பட்சத்தில் ருத்துராஜ் கேப்டனாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் வென்று கோப்பையை வென்றால் அதோடு தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின் அடுத்த சீசனில் இருந்து சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்படுவார். இல்லையென்றால் அடுத்த சீசனில் புதிய கேப்டனோடு தோனி வெறும் வீரராக தொடருவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications