குடும்பத் தலைவிகளுக்கான ₹1000 உரிமைத்தொகை.. தொகையை பெறுவது எப்படி? வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம்.
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டத்தில் பணத்தை பெறுவது எப்படி என்பது தொடர்பான முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதன்பின் இந்த திட்டம் ஜூன் 3ம் தேதி.. அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

என்ன காரணம்
முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்

எப்போது
இந்த நிலையில்தான் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதன்பின் இந்த திட்டம் ஜூன் 3ம் தேதி. அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டத்தில் பணத்தை பெறுவது எப்படி என்பது தொடர்பான முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

யாருக்கு கிடைக்கும்?
இதில் யாருக்கு எல்லாம் பணம் கிடைக்கும் என்று பார்க்கலாம்,
வறுமை தொகைக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. NPHH -S, NPHH - NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது
ஏற்கனவே புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் வாங்கினாலும், அவர்களின் அம்மாக்களுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும். முதியோர் உதவித்தொகை பெற்றாலும், அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு கிடைக்காது?
தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும்.
அரசு ஊழியர்கள், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரி செலுத்தம் நபர்களுக்கு கிடைக்காது.
அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது.

எப்படி பெறுவது?
இதற்காக பெண்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. இவர்களின் லிஸ்டை அரசு தானாகவே எடுக்கும். அந்த லிஸ்டில் உள்ளவர்களின் வங்கி கணக்குகள் சோதனை செய்யப்படும். அதில் தவறு இருந்தால் குறிப்பிட்ட நபர்களிடம் வங்கி கணக்குகள் பெறப்படும். அதன்பின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படும். இதற்காக ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை.












Click it and Unblock the Notifications