பாஜகவில் பிரதமர் மோடிக்கு பிறகு யார்? ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரபர பேச்சு
சென்னை: பாஜகவில் பிரதமர் மோடிக்கு அடுத்து யார்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி மற்றும் பாஜகதான் கலந்தோலாசித்து முடிவு செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.
மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் உள்ளது. பிரதமர் மோடிக்கு தற்போது 75 வயதுஆகிவிட்ட நிலையில், அவருக்கு அடுத்து பாஜகவில் யார் பிரதமராக முன்னிறுத்தப்படுவார் என்ற விவாதங்கள் அவ்வப்பொது எழுந்து வருகின்றன. இது தொடர்பாக பாஜகவோ, அதன் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸோ வெளிப்படையாக கருத்து கூறுவது இல்லை.

மோடிக்கு பிறகு யார்?
இந்த நிலையில்தான், சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் இது தொடர்பாக பேசியுள்ளார். மோகன் பகவத் இது தொடர்பாக பேசியதாவது:-
சில கேள்விகள் என் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.. எனவே இந்த விவகாரத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. என்னால் வாழ்த்துக்களை மட்டுமே பகிர முடியும். அதை தவிர வேறு எதையும் சொல்வதற்கு இல்லை. மோடிக்கு பிறகு யார்? என்றால், பாஜகவும் மோடியும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது.
மோடிக்கு 75 வயது ஆகிவிட்டது
பாஜகவில் 75 வயது ஆனால் தலைவர்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு அளிக்கும் எழுதப்படாத விதி கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக தனது கருத்தை நேரடியாக தெரிவிக்க மோகன் பகவத் மறுத்து வரும் நிலையில், மீண்டும் அதே மாதிரியான நிலைப்பாட்டையே அவர் கடைபிடித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பேசிய மோகன் பகவத், நானோ, அல்லது வேறு யாரோ, 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என்று ஒருபோதும் பேசவில்லை எனவும், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்ற ரீதியிலும் பேசியிருந்தார். பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் 75 வயதை எட்டினார். பாஜகவில் 75 வயதான தலைவர்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு என்ற எழுதப்படாத விதி கடைபிடிக்கப்பட்டது.
மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் இதன் அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டனர். இந்த நிலையில்தான் மோடி 75 வயதை எட்டியதால் அவரும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற வாதம் எழுத்தது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை வைத்து கேள்விகள் எழுப்பின. இந்த நிலையில்தான், 75 வயதில் அரசியல் ஓய்வு என்ற விதியும் பாஜகவில் இல்லை என்று கூறி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications