விளவங்கோடு இடைத்தேர்தல்.. விட்டதை பிடிக்குமா காங்கிரஸ்? யாருக்கு வெற்றி வாய்ப்பு.. பரபர சர்வே
சென்னை: காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு இடைத்தேர்தலில், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கொடு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதோடு, தனது எம்.எல்.ஏ பதவியில் இருந்தும் விலகினார்.

விளவங்கோடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக விஜயதாரணி இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த நிலையில், திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக சார்பில் விஎஸ் நந்தினி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நான்கு முனை போட்டி நிலவும் விள்வங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
அதன்படி, விளவங்கோடு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 44 முதல் 50 சதவீத வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
காங்கிரஸ்: 44% - 50%
பாஜக: 30% - 36%
அதிமுக: 12% - 18%
நாம் தமிழர்: 03% - 06%
மற்றவை: 01% - 03%.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications